அவுஸ்திரேலிய அணியில் பாகிஸ்தானியர்
பாகிஸ்தான் வீரர் பவாத் அகமதுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டது. இவர், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் பிறந்தவர் பவாத் அகமது, 31. சிறந்த "லெக் ஸ்பின்னரான' இவர், 10 முதல் தர போட்டிகளில் விளையாடினார். பின் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பாகிஸ்தானில் பெண் கல்வியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். இதையடுத்து இவரது உயிருக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்ததாம். உடனே 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு குறுகிய கால "விசா'வில் சென்றார். இங்கு ஆஸ்திரேலிய "ஏ' அணிக்காக விளையாடினார்.
பின் தஞ்சம் அடைய முடிவு செய்த இவர், நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார். விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் இவருக்கு விரைவாக ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டது.
வார்ன் ஓய்வுக்கு பின் தரமான சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் தவித்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு பவாத் அகமது வரவு சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வரும் 10ம் தேதி துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
இது குறித்து பவாத் அகமது கூறுகையில்,""என்னால் நம்பவே முடியவில்லை. இதை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன். சிறப்பு சலுகை காட்டிய அரசுக்கு நன்றி. எனக்காக சட்டத்தையே மாற்றியது சாதாரண காரியம் அல்ல. தற்போது ஆஸ்திரேலிய குடிமகனாகி விட்டேன். கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன். கிரிக்கெட் அரங்கில் எனக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு,''என்றார்.

Very good. Be a Muslim like amla
ReplyDelete