Header Ads



மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் நாட்டில் பிரிவினை ஏற்படும் - கோட்டா

மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் பிரிவினை வாதத்தை தோற்றிவிப்பதுடன் ஆபத்தான நிலைக்கும் இட்டுச் செல்லும் என பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் பல விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் முதலமைச்சர்களினால் நிர்வகிக்கப்படும் மாகாணங்களிலும் 9 காவற்துறைகள் உருவாகும். இந்த காவற்துறை நிலையங்களின் நேரடியான நிர்வாகம் காவற்துறை மா அதிபரிடம் இருந்து மாகாண முதலமைச்சரின் கைகளுக்குள் செல்லும். முதலமைச்சரின் கீழ், பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர் மாகாண காவற்துறையை நிர்வகிப்பார்.

அத்துடன் நாட்டில் காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு மாகாணத்திற்குள்ளேயே மேற்கொள்ளலாம் என்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இனரீதியான காவற்துறை நிலையங்கள் உருவாக வழியமைக்கும். எனினும் இந்த மேற்கூறப்பட்ட நிலைமைகள் நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் அதேவேளை மாகாண சபையின் காவற்துறைக்கு பொறுப்பாக இருக்கும் பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கூட மாகாண முதலமைச்சரிடம் அனுமதிபெற வேண்டும்.

அத்துடன் அவருடைய குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதா இல்லையா என்பது குறித்தும்  முதலமைச்சரின் விருப்பத்துடனேயே இடம்பெறும்.  இதன் மூலம் காவற்துறையினரின் ஒழுக்கம், சட்டத்தை பாதுகாக்கும் காவற்துறை மா அதிபரின் அதிகாரம் இல்லாமல் போய்விடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மாகனங்களுக்கிடையில் அதிகாரம் பகிரப்பட்டால் தான் நாட்டில் சமாதனம் ஏற்படும் என்று உலகமே சொல்கிறது......
    உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி தலைகீலக தோணுது....?

    ReplyDelete
  2. மற்றவர்களையும் அரவணைத்து நடக்கும் ஒரு மனிதன் இக்கருத்தைச்சொன்னால் அது ஏற்றுக்கொள்ளுமளவிற்கு இருக்கும் ஆனால் நீங்களெல்லாம் சிறுபான்மையினரை அழித்தொழிக்கும் ரீதியில்தான் செயல்படுகின்றீர்கள் என்பதால் உங்களை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.

    அத்துடன் எல்லாவிடயங்களையும் எதிர்மறையாக ஏன் பார்கவேண்டும் உரியவர்களுக்கு உரிய உரிமைகளைப்பகிர்ந்தளித்தால் ஏன் நாம் இத்தனை வருடம் பின் தங்கி வாழவேண்டும்???? எப்போது புரியும் உங்களுக்கு இதுபோன்ற உண்மைகள்....

    பிரச்சினைகளை ஆரம்பத்திலிருந்து உண்டாக்கியவர்களே நீங்கள்தான் பிரிவினை வாதத்தையே ஆரம்பித்தது நீங்களேதான் அதனால்தான் இன்று இதுவரை பிரச்சினைகளே உண்டாகி நிற்கின்றோம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க பழகிக்கொள்ளுங்கள் சமாதான தானாகவே வரும் சுபிட்சமான வாழ்வும் கிடைக்கும். முதலில் உங்கள் மனதிலுள்ள கறள்களைக்களையுங்கள் எல்லாம் நலமாக நடக்கும்.....

    ReplyDelete

Powered by Blogger.