அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சரான றிஷாட் பதியுதீன், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டுமென மேல் நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கும் மனுவொன்றை மன்னார் சட்ட சங்கம், காலி சட்ட சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட சிரேஸ்ட சட்டத்தரணிகள் இன்று புதன்கிழமை தாக்கல் செய்தனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், இம்மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தார் என அவருக்கு தண்டனை வழங்கக்கூடாது என்பதற்கு காரணம் காட்டுமாறு பிரதிவாதிக்கு நீதிமன்றம் பணிக்க வேண்டுமென மனுவில் கேட்டுள்ளனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அவரை தண்டிக்க வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இல. பீ 396ஃ2010 வழக்கு தொடர்பாக மன்னார் நீதவான் கடந்த ஜூலை 16ஆம் திகதி விடுத்த ஆணையை மாற்றுமாறு ஜூலை 17ஆம் திகதி பிரதிவாதி நீதவானுக்கு தொலைபேசி மூலம் கூறியுள்ளார். அத்துடன், ஜூலை 18ஆம் திகதி தனியார் ஒருவரின் தொலைபேசியிலிருந்தும் நீதவானுக்கு இன்னொரு அழைப்பு வந்துள்ளது.
பிரதிவாதி, ஜூலை 18இல் நீதி சேவைகள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்தித்து மன்னார் நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யும்படியும் கேட்டுள்ளார். இதற்கு முன்னர் பிரதிவாதி, நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இவை எல்லாம் நீதித்துறையினதும் நிதிமன்றங்களினதும் முறையான செயற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட தலையீடு என மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மன்னார் சட்டத்தரணிகளும் காலி சட்டத் தரணிகளும் நீது மன்றத்தால் வழங்கப் பட்ட தீர்ப்பு சரியா என முதலில் இலக்கை சிவில் சட்டம் மற்றும் காணிகள் பொது சொத்துக்கள் தொடர்பான விதிகள் என்பவற்றை ஆதாரம் காட்டி நிரூபிக்கட்டும். பிறகு மற்றவற்றை பார்க்கலாம். நீதிபதியிடம் தனிப்பட்ட முறையில் கதைத்தது நீதிமன்றத்தை அவமதித்து ஆகாது. நீதிபதியிடம் வழங்கப் பட்ட தீர்ப்பு என்ன அடிப்படையில் வழங்கப் பட்டது என்று அறியும் உரிமை பொது மக்களுக்கு இருக்கும் பொது ஒரு அமைச்சர் அதைக் கேட்டு அறிந்து கொள்வது அவரது உரிமை. சட்டக் கோவைகளை ஆதாரம் காட்டி தான் வழங்கிய தீர்ப்பு சரியானது என நிரூபிக்கவேண்டியது நீதிபதியின் கடமை. இதில் நீதிமன்றத்தை அவமதித்த செயல் என்று எதனை சொல்ல வருகின்றனர்.
ReplyDeleteஇலங்கையன் இர்பான்
அப்பாவிப் பொதுமக்களை சுடும்படி வீதியில் நின்று பொலிசாருக்கு உத்தரவிட்டதற்காக மன்னார் அநீதிபதியைத் தண்டிக்க வேண்டும் எனக் கேட்டு பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட வேண்டும்.
ReplyDelete