Header Ads



போதைப்பொருள் கடத்திய பிக்கு மாட்டினார்


பிக்கு போல் நடித்து போதைப்பொருள் கடத்திய நபரை “அத தெரண” உகுஸ்ஸா கண்டுபிடித்ததன் பின்னர் பொலிஸார் அவரை கைது செய்தனர்.


பெந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் பல்வேறு வகையான போதைப்பொருட்களை கொழும்புக்கு கொண்டு கமத்திச் செல்வதாக "அத தெரண” உகுஸ்ஸாவுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.


அதன்படி நேற்றைய தினம் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த உகுஸ்ஸா குழுவினர், குறித்த நபர் கடந்த காலங்களில் அத்திடிய பிரதேசத்திற்கு வந்திருந்ததை கண்டுபிடித்தது.


பின்னர் இதுபற்றி அறிந்த உகுஸ்ஸா குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றபோது அங்கு முச்சக்கரவண்டியில் அவர் இருந்துள்ளார்.


பின்னர் அவரைப் பின்தொடர்ந்த உகுஸ்ஸா குழுவினர், அவர் தனது பிக்கு மேலங்கியைக் கழற்றிவிட்டு சாதாரண ஆடையை அணிவதை அவானித்தனர்.


பின்னர் குறித்த பிக்கு பயணித்த முச்சக்கரவண்டி தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பெல்லந்தரை பகுதியில் வாகனத்தை நிறுத்தி சோதனையிடப்பட்டுள்ளது.

 

அங்கு, சாதாரண உடையில் இருந்த பிக்கு, பொலிஸாலிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.


பின்னர் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் பையில் கஞ்சா மற்றும்  மதன மோதகம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.


எதிர்காலத்திலும் இவ்வாறான மோசடியாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு "அத தெரண உகுஸ்ஸ" விழிப்புடன் உள்ளது.

No comments

Powered by Blogger.