Header Ads



பின் கதவால் வந்த மஹிந்த, பின் கதவாலேயே செல்ல வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

சட்டமூலமாக என்னை வெளியே அனுப்பவதானால் நான் செல்லத்தயார் என மஹிந்த கூறுகின்றார். ஆனால் அவர் பதவியேற்றுக் கொண்டதே சட்டவிரோதமான முறை என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -20- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி செயலகத்தின் பின் கதவின் மூலமாக வந்தே பதவியேற்றுக்கொண்டார். இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பின் கதவால் வந்தவர் பின் கதவாலேயே செல்ல வேண்டும். பின் கதவால் வந்துவிட்டு முன் கதவால் என்னை அனுப்புங்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது என கூறியுள்ளார்.

1 comment:

  1. Very True. Now he have to go back form BACK DOOR.

    ReplyDelete

Powered by Blogger.