Header Ads



பாராளுமன்றத்தில் மகிந்த அணி அக்கிரமம் - சபாநாயகர் ஆசனத்தையும் கைப்பற்றினர்

ஆளும் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, சபை அமர்வும் குறித்த நேரத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமாகவில்லை.

படைக்கள சேவிதர்கள் செங்கோலை சுமந்து நாடாளுமன்றுக்கு வருகைத்தரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

8 வது நாடாளுமன்றத்தின் 3 வது அமர்வு இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகவிருந்த நிலையில், சபை ஆரம்பமாவதற்கு முன்னரே ஆளும் தரப்பினர் குழப்பம் விளைவித்து வருகின்றனர்.

சபாநாயகர் ஆசனத்தை பலவந்தமாக பிடித்து வைத்து  அதில் அமர்ந்துள்ள அவர்களை கட்டுப்படுத்த மகிந்தவோ அல்லது மைத்திரியோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.