Header Ads



முதலமைச்சர் விக்னேஸ்வரன், இஸ்லாமிய சகோதரரை குத்திக்காட்ட வேண்டுமா..?

வன்னிக் காட்டில் இருக்கும் விலையுயர்ந்த காட்டு மரங்கள் எவ்வாறு களவாகக் கடத்திச் செல்லப்படுகின்றன. வன இலாகா அதிகாரிகளும் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளும் என்ன செய்கின்றார்கள், ஏது செய்கின்றார்கள் என்பதை நாம் அறிய முடியாமல் இருக்கின்றது என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மரம் நடுகை மாத நிகழ்வுகளின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில்,

சில காலத்திற்கு முன்னர் வடபகுதியில் காணப்பட்ட பல காட்டு மரங்கள், பனை மரங்கள், தென்னைகள் எனப் பெருவாரியான மரங்கள் வெட்டப்பட்டு பங்கர்களுக்கும், எல்லை வேலிகளுக்குமெனப் பயன்படுத்தப்பட்டன. மேலும் காட்டுமரங்கள் பல தீராந்திகள், பலகைகள், விறகுத் தேவைகளுக்காகவென அனுமதியுடனும், களவாகவும் வெட்டி அழிக்கப்பட்டன. இதனால் நாட்டில் மழையில்லாமற் போனது. போரின் நிமித்தம் சுவாசிக்கச் சுத்தமான காற்று இல்லாமற் போனது.

பறவையினங்கள் கூடுகட்டி வாழ்வதற்கான சந்தடியில்லாத இடங்கள், நீர்க்கரையோரங்கள் இல்லாமற் போயின. நாடுவிட்டு நாடு மாதக்கணக்காகப் பறந்து வந்து சேர்கின்ற சைபீரியன் தாராக்கள் போன்ற பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமில்லாமற் போனது.

காட்டு யானைகள் அமைதியாகத் தங்குவதற்கும், தமக்குரிய உணவுகளை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற சூழல் இல்லாமற் போனது. இதனால் அவை ஊர்மனைகளுக்குள் புகுந்து தென்னந்தோப்புக்கள், வாழைத் தோப்புக்களை அழித்தது மட்டுமன்றி மக்களையும் கொன்று வந்தன் வருகின்றன.

ஆகவே மாற்றப்பட வேண்டிய ஒரு அவசர நிலை இவற்றால் ஏற்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வந்த போதும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. கடந்தகாலத் தவறுகளைச் சீர்செய்ய வேண்டியுள்ளது.

ஆண்டவன் படைப்பில் எல்லா உயிரினங்களுக்கும் அமைதியாக வாழ்வதற்கு உரித்துண்டு. ஆனால் மனிதர்களின் தான்தோன்றித்தனமான போக்குகளால் இயற்கையின் சமநிலை பாதிப்படைந்துள்ளது.
 

விலையுயர்ந்த காட்டு மரங்கள் எவ்வாறு களவாகக் கடத்திச் செல்லப்படுகின்றன, வன இலாகா அதிகாரிகளும் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளும் என்ன செய்கின்றார்கள் ஏது செய்கின்றார்கள் என்பதை நாம் அறிய முடியாமல் இருக்கின்றது.

இவை மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் திணைக்களங்கள். அரசியல் செல்வாக்குடன் தான் இந்தக் காட்டை அழிக்குங் கைங்கரியம் கைகூடி வருகின்றது என்பது கண்கூடு. இந்த இடங்களில் எல்லாம் யாரைக் குடியமர்த்தப் போகின்றார்கள் என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு எனது நண்பர் ஒருவர் கொழும்பில் உள்ள தமது வீட்டை இஸ்லாமிய நாடொன்றின் பிரதிநிதிக்குக் குத்தகைக்குக் கொடுத்திருந்தார். நண்பர் தமது வீட்டின் தோட்டத்தில் பல மரங்களையும் கொடிகளையும் நாட்டியிருந்தார்.

நிழல் கொடுத்து பசுமையான சூழலை அம்மரங்கள் கொடுத்து வந்தன. குத்தகை முடிந்து வீட்டைத் திரும்பி ஏற்கும் போது தோட்டத்தில் ஒரு மரமில்லை. கேட்டால் பாம்புகள் வரக்கூடும் என்று அவற்றைத் தறித்து விட்டதாகக் கூறினார் அக்குடியிருந்தவர். மரங்கள் மீது அவர்களுக்கிருந்த ஆர்வம் அவ்வளவுதான்.


காட்டின் நடுவே மொட்டையாக்கப்படும் இடங்கள் மீளவும் மரங்கள் வளர்த்துப் பாதுகாக்கப்பட வேண்டும். எமது வன இலாகா அலுவலர்கள் இனியாவது விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

அத்திணைக்களத்தின் பணியாளர் வெற்றிடங்களுக்குப் பெருவாரியாக வடமாகாணத்துக்கு வெளியில் இருந்து ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும் கேள்விப் படுகின்றேன். வெளியில் இருந்து வருபவனுக்கு எமது இயற்கை நிலையைப் பேணிக் காக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

இவர்களால் எம்மக்களின் வேலைவாய்ப்புக்கள் தடைப்டுகின்றன. இவ்வாறான சிக்கல்கள் மத்தியில்த் தான் நாங்கள் மரம் நாட்டும் இந்தக் கைங்கரியத்தை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

4 comments:

  1. Ada madachamburani onkku mathitharkali vida maranthan peritho ippatha onkku intha nalla puthi vathatho. Appadi endal ne kattula poi valalame en vittula valrai also onkku vada maganathil ulla kadu alippu mattum than kannukku theriuthu akkum.

    ReplyDelete
  2. Hi poda bai

    ReplyDelete
  3. இது ஒரு வேஸ்ட் ஒரு பிரயோஜனமும் இல்லை.மூட்ட மாதிரி லேசா அங்குமிங்கும் குத்துப்போட்டு இருப்பதுதான் இவரின் வேலை.

    ReplyDelete
  4. Vignesawarn appears to be a ex judge with little knowledge of anything. About a couple of months ago, he said in a meeting in Jaffna or somewhere in north about holy Quran, that its all about Prophet Mohamed (saw). I do not think, he has any idea about Islam or any other religion except for Hindusim. A person holding a public office can not isolate any group or community and blame in public for an individual's wrong doing. He was elected for whole Norther province. I do not consider him a person of respect. Sumandran is the only respectable guy in TNA.

    ReplyDelete

Powered by Blogger.