'சீதனம்' எங்கிருந்து ஆரம்பிப்பது..?
-Firthous Fa-
அல்லாஹ் நம்மை பைத்தியகாரனாக , குருடனாக , செவிடனாக , எழும்பி நடக்க முடியாத அங்க வீணம் உள்ளவனாக படைத்திருந்தால் எங்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று சற்று சிந்தித்து விட்டு வாசிக்க தொடங்குங்கள்
பெண்களிடம் வீடு வாங்கும் திருமண முறையால் அதிகமாக ஏழை குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை சகல மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல உண்மை சம்பவங்களின் தொகுப்பு தான் இது
தனது சகோதரிகளுக்காக தனது முழு உழைப்பையும் சேமிப்பாக மாற்றி பல இலட்சம் ரூபாய் செலவு செய்து வீடு கட்டி கொண்டு திருமணம் பேசினால் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையும் குடும்பத்தார்களும் வீட்டில் உள்ள சகல அறைகளை சுற்றி பார்த்து விட்டு பலவற்றில் குறைகளை கண்டு பிடிப்பார்கள் அதன் பிறகு அதை மாற்றி தர வேண்டும் new model light , western toilet வைக்க வேண்டும் இந்த டிசைன் எங்களுக்கு பிடிக்கவில்லை மாற்றுங்கள் இதை உடைத்து விட்டு எங்களுக்கு பிடித்த டிசைனில் மீண்டும் கட்டி தர வேண்டும் என்றும் பல கட்டளை இட்டு செல்வார்கள்
தந்தை இருந்திருந்தால் சகல வற்றையும் செய்து கொடுத்திருப்பார் என்று தன் சகோதரி கவலை அடைந்து விடுவாள் அல்லது பல மாப்பிள்ளைகள் வந்து பார்த்து விட்டு வேண்டும்/வேண்டாம் என்று சொல்லும் நிலை தன் சகோதரிக்கு வந்து விட கூடாது என்பதற்காகவும்
தாய் தன் மகனிடம் படித்த மார்க்கத்தை மனதில் சுமந்த மாப்பிள்ளை தன் மகளை நன்றாக பார்த்து கொள்வார் . அவர்கள் கேட்பதை செய்து கொடுத்து அவருக்கே கட்டி கொடுப்போம் . என்றவுடன் கடன் பட்டு வீட்டையும் திருத்தியமைத்து கொஞ்சம் நகையும் போட்டு திருமணமும் செய்து வைக்கின்றனர்
அதன் பிறகு சகோதரன் திருமணத்திற்கு பட்ட சகல கடனையும் அடைப்பதற்கு கட்டிய தன் மனைவியை விட்டு விட்டு வெளிநாட்டுக்கு சாரதியாக அல்லது வேறொரு வேலைக்காக செல்கின்றான்.
2வருடம் வேலை செய்த பணத்தில் கடனை அடைத்து விட்டு நாட்டுக்கு சென்று மனைவியுடன் சந்தோஷமாக கூலி வேலை செய்தாவது வாழ்க்கை நடத்துவோம் . என்று என்னும் போது சகோதரியின் கணவன் மீண்டும் ஒரு சுமையை அவரின் தலையில் சுமத்துகின்றார்.
என்னவென்றால் தன் பெற்றோர்களின் வீடுகளில் உள்ள குறைகளையும் செய்து தரும்படி மனைவியின் சகோதரனை கட்டாய படுத்தும் போது சகோதரியின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு செய்து தருவதாக ஒப்புக் கொண்டு இன்னும் ஒரு வருடம் வெளிநாட்டில் வாழும் துர்பாக்கிய நிலை
பெண்ணை கட்டி கொடுத்து விட்டால் காலம் முழுவதும் பெண்ணின் குடும்பம் உங்களுக்கு அடிமையை போல் நீங்கள் சொல்வதை எல்லாம் செய்து தர வேண்டும் என்று அதிகாரத்துடன் அவர்களின் பலகீனத்தை பயன் படுத்தி கொள்ளும் உங்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன ? ?
நீங்கள் யார் ? ? அருவருப்பான இந்திரிய துளியிலிருந்து தானே அல்லாஹ் உங்களை படைத்தான் அப்படி இருக்கும் போது எதை வைத்து கொண்டு உங்களை மதிப்பீடு செய்து கொண்டு பெருமை யோடு இவ்வுலகில் ஆட்டம் போடுகின்ரீர்கள்
அல்லாஹ் உங்களைக் மேன்மை படுத்தியுள்ளான் என்பதற்காகவா? ?
கல்வியை , மார்க்கத்தை , தொழிலை கொடுத்த அல்லாஹ்வின் கட்டளையை புறக்கணித்து விட்டு அற்ப உலக வாழ்க்கைக்காகவும் உங்கள் சுயநலத்திதற்காகவும் மார்க்கத்தின் கட்டளையை நிராகரித்து விட்டீர்களே ? ?
என்னுடைய கை சேதமே என்று கவலை படும் நாளை மறந்துவிட்டாமே !

சகோதரரே; உங்களுக்கு சீதனம் என்றால் என்னவென்று தெரியுமா? சீதனம் என்பது பெண்வீட்டார் தரப்பிலிருந்து மாப்பிள்ளைக்கு அவருக்கு என்று சொந்தமாக அல்லது அவர் பேரில் எழுதி கொடுத்தாலே சீதனமாகும். இப்படி மாப்பிள்ளை பேரில் வீடு , காணி , கடை போன்றவற்றை எழுதி கொடுக்கும் முறை இலங்கையில் எந்தப்பாகத்திலும் இல்லை. இங்கு இருக்கின்ற முறை பெண் வீட்டாரை பெண்ணுக்கு கொடடுங்கள் என்று நிற்பந்திக்கும் முறையே. இந்த முறை இஸ்லாத்திற்கு எவ்வாறு முரணானது என்பதை குர்ஆன் ஹதீஸின் ஆதாரத்துடன் நிறுவுங்கள். நமக்கு முன்மாதிரி நபி ஸல் அவர்கள்.அவர்களுடைய பல மணைவி மார்களில் எத்தனை பேருக்கு வீடு கொடுத்திருக்கிறார்கள், எத்தனை பேர்களுடைய வீட்டில் நபி ஸல் அவர்கள் வாழ்ந்திருக்கார்கள் என்பதையும் ஆய்வு செய்யுங்கள்
ReplyDeleteசகோதரரே; உங்களுக்கு சீதனம் என்றால் என்னவென்று தெரியுமா? சீதனம் என்பது பெண்வீட்டார் தரப்பிலிருந்து மாப்பிள்ளைக்கு அவருக்கு என்று சொந்தமாக அல்லது அவர் பேரில் எழுதி கொடுத்தாலே சீதனமாகும். இப்படி மாப்பிள்ளை பேரில் வீடு , காணி , கடை போன்றவற்றை எழுதி கொடுக்கும் முறை இலங்கையில் எந்தப்பாகத்திலும் இல்லை. இங்கு இருக்கின்ற முறை பெண் வீட்டாரை பெண்ணுக்கு கொடடுங்கள் என்று நிற்பந்திக்கும் முறையே. இந்த முறை இஸ்லாத்திற்கு எவ்வாறு முரணானது என்பதை குர்ஆன் ஹதீஸின் ஆதாரத்துடன் நிறுவுங்கள். நமக்கு முன்மாதிரி நபி ஸல் அவர்கள்.அவர்களுடைய பல மணைவி மார்களில் எத்தனை பேருக்கு வீடு கொடுத்திருக்கிறார்கள், எத்தனை பேர்களுடைய வீட்டில் நபி ஸல் அவர்கள் வாழ்ந்திருக்கார்கள் என்பதையும் ஆய்வு செய்யுங்கள்
ReplyDeleteI am sorry to tell that Sahi Sava's comment is so detestable. While the Mahar is compulsory for a man , how is Dowri possibly allowed in Islam?? So shameful!. Stand up, build the house, make the money all you want after you marry not from their father or brother! Sahi! May Allah bless you many daughters and you give them Dowri & enjoy!
ReplyDeleteBrother Sahi, appo intha pahal kollaikku enna peyar vechirichinga.
ReplyDelete