Header Ads



இன்றைய ஜும்மாவில் ரிஸ்வி முப்தி, தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள்..!

-Mohamed Muhsi-

அகில இலங்கை உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி புத்தளம் பெரிய பள்ளி ஜும்மாவின் போது தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள்.!

1. நமக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட விட்டுக் கொடுப்பும், பணிவும் மிகவும் அவசியமாகும். வேற்றுமையில் ஒற்றுமை காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

2. பிறர் குறைகளை மூடி மறைப்பதை விடுத்து, அவற்றைத் துருவித் துருவி ஆராய்ந்து, பிறரை இழிவுபடுத்தும், அவமானப்படுத்தும் செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

3. ஹராமான விடயங்கள் பற்றி அறிந்து வைத்துள்ளோம். நமக்குள் சண்டை இடுவதும் ஹராம் என்பதிலும் நாம் தெளிவு பெற வேண்டும்.

4. நமது பண்பாடுகளாலும், ஒழுக்க விழுமியங்களாலும் சிறந்த முன்மாதிரிகளை மாற்று மத மக்களுக்கு காண்பிக்க வேண்டும். அதுவே நம்மைப் பற்றி அவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள தப்பெண்ணங்கள் களையப்பட காரணமாக அமையும்.

5. இந்த நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதோர் மத்தியில் இஸ்லாத்தின் தூதை எத்தி வைப்பதில் நாம் தவறி இருக்கிறோம். அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.

6. ஜம்மிய்யதுள் உலமா நடத்துகின்ற மக்தப்கள் புத்தளத்தில் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

7. புத்தளம் மக்கள் வட மாகாண முஸ்லிம் மக்களை வரவேற்று, உபசரித்து வருகின்றமை மிகவும் பாராட்டத்தக்கது.

8. அரசியலில் ஈடுபடுவோர், புத்திஜீவிகள், உலமாக்கள் எல்லோரும் இணைந்து புத்தளத்தை அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றியமைக்க வேண்டும்.

4 comments:

  1. Very good. Muthal muraiyaha etho vithyasama solliyirukkirar. in sha allah. poruthirundu parpom.
    Iyakkangalai valarkka paadupadufarhal inimelavathu serndu ( only according to al quran and sunnah) nadandal nallam.

    ReplyDelete
  2. ஒற்றுமை எனும் கயிறு மித்தில் நீண்ட காலமாக இவ்வசனம் (3:103) மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர். "ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர். நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர். இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை. "அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்" என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது. "குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்" என்று இவர்கள் நேர்மாறான விளக்கத்தைத் தருகின்றனர். அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும். ஒற்றுமை வாதம்தான் மனித குலத்தை நாசப்படுத்தும் நச்சுக் கிருமியாகும். அயோக்கியர்களையும் நல்லவர்களையும் சமநிலையில் நிறுத்தும் இந்த வாதம்தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது. அல்லாஹ்வை வணங்கு எனக் கூறினால் அதனால் ஒற்றுமை கெடாது. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது எனக் கூறினால் உடனே ஒற்றுமை கெடும். ஆனால் இஸ்லாம் ஒற்றுமைக்கு எதிரான இந்த நெகடிவ் - எதிர்மறை அடிப்படையில் தான் தனது ஏகத்துவக் கொள்கையை அமைத்துள்ளது. சிலை வணங்குபவனிடம் போய் இதை வணங்காதே எனக் கூறினாலும், தர்கா வணங்கியிடம் தர்காவை வணங்காதே எனக் கூறினாலும், மனிதனை வணங்குபவனிடம் இவனை வணங்காதே எனக் கூறினாலும் உடனே ஒற்றுமைக்குப் பங்கம் வந்து விடும். ஆனாலும் அதைத் தான் இஸ்லாம் மனித குலத்துக்கு போதிக்கிறது. தீமையை தடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. நிச்சயம் இது ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கவே செய்யும். தீமைக்கு உதவாதீர்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதுவும் ஒற்றுமைக்கு உலை வைக்கவே செய்யும். சொந்த பந்தங்களை விட கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவும் குர்ஆன் கூறுகிறது, இதுவும் ஒற்றுமைக்கு எதிரானது தான். அனைவரும் சேர்ந்து குடிப்பதை விட அனைவரும் சேந்து ஒற்றுமையாக வரதட்சணை வாங்குவதை விட அனைவரும் சேர்ந்து அயோக்கியத்தனங்கள் செய்வதை விட நல்லவர்களைப் பிரித்து நல்லவர்களும் கெட்டவர்களும் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று பிரகடனப்படுத்தவே இஸ்லாம் வழங்கப்பட்டது. தீமையை எதிர்க்கத் துணிவற்றவர்களும் வளைந்து கொடுப்பவர்களும் கண்டுபிடித்த பொய்யான தத்துவமே ஒற்றுமை வாதம் ஒற்றுமைவாதம் என்னும் இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கிருமியை ஒழித்தால் தான் சமுதாயம் உருப்படும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியது 100% சரியானது.

      Delete
  3. தூதை எத்தி வைப்பதில் தவறு இளைத்திருக்கிறோம் என்று சொல்லும் இவர் இப்போது சரியான தூதை எத்தி வைக்க தயாராக இருக்கார்களா?போன பஸ்சுக்கு கை காட்டிக்காட்டியே நமக்கு பழகிப்போச்சு.முடிந்தால் சீதன எதிப்பு போராட்டம் ஒன்றை நடத்தி காட்டட்டும் உலமா சபை.

    ReplyDelete

Powered by Blogger.