Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு, ரவூப் ஹக்கீமின் யோசனை

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 400 பில்லியன் ரூபாய்களுக்கான திறைசேரி உண்டியல் பிரேரணையின் போது எதிர்த்து வாக்களித்தமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்

ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தின் பின்னர் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு ஒன்றின்போதே இந்த அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த செயலால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 19வது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது முதலாவது உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்த வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இதனால் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவை பெற்றுக்கொள்ள உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுத்தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலை போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்துப் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததுடன், இது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

1 comment:

Powered by Blogger.