Header Ads



கர்ப்பப்பை இன்றி பிறந்த, பெண்ணுக்கு இரட்டை குழந்தை

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஹேலிஹேய்ன்ஸ் (28). இவர் ஆண்மை தன்மை நிறைந்தவராக இருந்தார். எனவே, அவருக்கு கர்ப்பப்பை வளரவில்லை. அதாவது அவர் பெண்ணாக இருந்தாலும் ஆணாக வாழ்ந்தார். இந்த நிலையில் இவருக்கு சாம் என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணமானாலும் கர்ப்ப பை இல்லாததால் தனக்கு குழந்தை பிறக்காதே என்ற கவலையில் இருந்தார். இந்த நிலையில் 19 வயதுக்கு பிறகு உடலில் திடீரென மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

அதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரை சந்தித்தார். ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது வயிற்றில் மிக சிறிய அளவில் கர்ப்ப பை வளர்ந்து வருவது தெரிந்தது.

இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் டாக்டர் அவருக்கு மாத விடாய் ஏற்படவும், பெண்மை தன்மை அதிகரித்து கருப்பை வளரவும் ஹார்மோன் மருந்து மாத்திரைகள் வழங்கினார்.

அதை தொடர்ந்து அவரது கர்ப்ப பை நல்ல முறையில் வளர்ச்சி அடைந்தது. இதனால் கர்ப்பம் அடைந்த அவர் தற்போது இரட்டை பெண் குழந்தைகள் பெற்றுள்ளார். அவர்களுக்கு ஏவரி, டார்சி என பெயரிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.