திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 11ம் திகதிவரை, விளக்கமறியல் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தநாயக்கவை குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று காலை கைது செய்திருந்தனர்.
பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் பிரச்சாரக் காலத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பிலான ஆவணங்களையும் அத்தநாயக்க சமர்ப்பித்திருந்தார். குறித்த ஆவணம் போலியானது எனவும் அதற்கான ஆதாரங்கள் உண்டு எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

திரு. மைத்திரி அவர்கள் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து எனது நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து ஒரு புதிர்போட்டார்.
ReplyDelete'இந்த தேர்தல் திருவிழாவின் அதிபுத்திசாலி யார்.. அதிமுட்டாள் யார்' என்று கேட்டார்?
எனக்கு உடனடியாக பதில் கூற முடியாததால் 'தெரியவில்லை' என்றேன்.
அதற்கு அவரே கூறினார், அதிபுத்திசாலி 'ரணில் விக்கிரமசிங்ஹ' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அழைப்பு தானாகவே தடைப்பட்டு விட்டது. அதன் பிறகு அவரை இன்றுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனாலும் எனக்கு அவரது பதிலின் பிற்பகுதி புரிந்து விட்டது.
அப்படியானால் அந்த மற்றையவர் யார் என்றுதானே கேட்கின்றீர்கள்?
இதோ அவரைப்பற்றிய செய்தியைத்தானே நானும் நீங்களும் இந்த நிமிடத்தில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.