முஸ்லிம் அரசியல், வியாபாரிகள் பகுதி -1
பைசர் முஸ்தபா, பதவி விலகல் பொதிந்துள்ள இரகசியங்கள்..!
(ஜஹங்கீர்)
(ஜஹங்கீர்)
பைசர் முஸ்தபா ஆரம்ப காலத்தில் மு.கா.வுடன் நெருக்கமான உறவுகளுடன் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும். பிற்காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானுடன் நெருக்கமான உறவுவை வளர்த்துக் கொண்டு அந்தக் கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு முஸ்லிம் தமிழ் வாக்குகளினால் அன்று பாராளுமன்ற உறுப்பினரானார்.
தன்னைப் பாராளுமன்ற உறுப்பினராக்கிய இ.தொ.கா.வுடன் முரன்பட்டு அந்தக் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதற்கு முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் சார்ந்த விடயம் என்று முத்திரையை அவர் பதித்தாலும் அது எவ்வளவு தூரம் நியாயமானது என்ற விடயத்தில் இந்தக் குறிப்பை முன்வைக்கின்றவனிடத்தில் நிறையவே இது விடயத்தில் முரன்பாடுகள் இருக்கின்றது. அவசியப்படுமானால் அது பற்றியும் பேசலாம்.
இரண்டாவது பாராளுமன்றப் பிரவேசத்தை அக்குரனையை தளமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக அவர் பெற்றுக் கொள்கின்றார். பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட இவருக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கினார்கள். அத்துடன் இந்தத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலேயே அதிகம் பணம் செலவு செய்த வேட்பாளராகவும் இவரே இருந்தார்.
கண்டியில் தேர்தலில் போட்டியிட்டபோது இவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் வரலாற்றில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி கொடுத்த அதிகபட்ச வாக்குறுதிகளாக வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது. அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களை கைவசம் வைத்திருப்போர் நமது கூற்றின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து பார்க்கலாம்.
கண்டியில் முஸ்லிம் கல்விப் பிரிவை ஏற்படுத்தி கண்டி முஸ்லிம்களின் கல்வித் துறையை இவர் தலைகீழாக புரட்டிப் போடப் போவதாகவும் அரபு நாட்டுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இங்குள்ள முஸ்லிம் கிராமங்களை செர்க்க புரியாக மாற்றிக் காட்ட முடியும் என்று கருத்துப்பட இவர் அப்போது பேசி வந்தார்.
அக்குரணை மக்களின் கனிசமான வாக்குகளைப் பெற்று இவர் பாராளுமன்றம் போனாலும் பிற்காலத்தில் அக்குரணையுடன் தொடர்புகளை முற்றாக தூண்டித்துக் கொண்டார். சந்திக்க வந்தவர்களிடத்தில் தான் பணம் கொடுத்துத்தான் வாக்குகளை வாங்கியதாகவும் பரவலாக பேசி வந்தார். இவர் அமைப்பாளராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்த காலத்தில் அக்குரணையில் நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் இவர் தனது கையாட்களான முஸ்லிம்கள் பலரை தேர்தல் களத்தில் இறக்கிய போதும் அவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதற்குக் காரணம் பாராளுமன்ற உறுப்பிராகவும் அக்குரணை அமைப்பாளராகவும் இருந்த அவர் மீது மக்கள் கொண்டிருந்த அதிர்ப்தியின் வெளிப்பாடாக அது அமைந்திருந்தது.
கண்டியில் ஏதோ பெரிய சாதனை படைத்தவர் போல் கொழும்பிலும் முஸ்லிம்களின் கல்வித்துறை அபிவிருத்தியை கண்டியில் அமைத்த முஸ்லிம் கல்விப் பிரிவைப் போல் ஒன்றை அமைந்து அங்கும் மாற்றம் கொண்டு வரப்பேவதாக மத்திய கொழும்பு சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டபோது கூட்டம் போட்டு கதை விட்டிருந்தார். இது ஒரு அரசியல் நகச்சுவை மட்டுமே. ஏனென்றால் கண்டி முஸ்லிம் கல்விப் பிரிவு என்பது ஒரு வெங்காயம்- அரசியல் பகிடி அப்படி ஒரு நல்ல காரியம் இங்கு ஏதுவுமே நடக்கவில்லை என்பதனை கொழும்பு முஸ்லிம்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவை அவர் கண்டியில் செய்த அரசியல் ஆச்சர்யங்கள். இப்போது அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பதவியை இராஜிநாமச் செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்கும் சமூக நலனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
ராஜபக்ஷவினால் இவருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி அந்தஸ்த்து வழங்கப்பட்டது. இதனால் முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கடிகள் கூட ஏற்பட்டது. ராஜபக்ஷவிடத்தில் பிடுங்கக் கூடியவற்றை எல்லாம் பிடுங்கிக் கொண்டு இவர் வெளியே வந்தது அவருடைய அரசியல் எதிர்காலம் பற்றிய சுயநலம் மட்டுமே. இதற்கும் சமூக நலன்களுக்கும் எந்த தொடர்புகளும் கிடையாது.
100 நாள் வேலைத் திட்டத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட அமைச்சு பற்றி இவருக்கு திருப்தி இல்லை. மேலும் தனக்குத் தெரியாமல் செயலாளர் போட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. தனக்கு கிடைக்க வேண்டிய பகுதிகளை அர்ஜூனாவுக்குக் கொடுத்து விட்டார்கள் என்ற பேச்சு, இதில் முஸ்லிம் சமூத்தின நலன்கள் ஏதும் அடங்கி இருக்கின்றதா? அரவே கிடையாது. மேலும் 100 வேலைத் திட்டத்தில் என்னதான் பெரிதாக செய்துவிட முடியும் இவருக்கு. இது மைத்திரி நிருவாகத்திற்கு தொந்தரவு கொடுக்கின்ற ஒரு வேலை. இதனால் நமது சமூகத்தின் நாமத்திற்குத்தான் களங்கம்.
அப்படியானால் ஏன் இவர் பதவி துறந்தார் என்ற கேள்வி எழுகின்றது. ஐ.தே.க. இவரை உள்வங்கிக் கொள்வதில் துவக்கம் முதலே அக்கரை காட்டவில்லை. மைத்திரியைப் பிடித்து கரை சேர்ந்தவர் வருகின்ற தேர்ததலில் மைத்திரி அணியில் தேர்தலுக்கு நின்றால் கரைசேர முடியாது என்று கருதுவதால் இன்று எப்படியும் யாரைப் பிடித்தாவது ஐக்கிய தேசியக் கட்சியில் சீட்டு வாங்கி விடலாம் என்று இவர் கருதுவதால் மைத்திரியிடமிருந்து முன்கூட்டியே ஒதுங்கி தனது தன்னலத்துக்கான பாதையில் இப்போது பயணிக்க துவங்கி இருக்கின்றார்.
இவர் பற்றிய இன்னுமோர் குறிப்பையும் இங்கு முன்வைக்க முடியும். கடந்த காலங்களில் இந்த சமூக இணையத்தளத்தை ஜப்னா முஸ்லிம் இணையத்தை (www.jaffnamuslim.com) ராஜபக்ஷாக்களுடன் சேர்ந்து தடைசெய்வதற்கு மூலகர்த்தவாக இருந்தவர்களில் இவரும் ஒருவரென கூறப்படுகிறது.
.jpg)
நன்றி
ReplyDeleteactually he had done so much against our community with mahinda and gota. he has never done anything good for our community ever. our community should identify him and reject him on next voting.
ReplyDeleteDear Brother I hope our community well understood about politician how are really for umma, without thinking about their pocket, Budda brothers are supporting to us but some muslim like musammil we want to identify very well
ReplyDelete