கரு ஜயசூரிய, சந்திரிக்கா தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆதரவளிக்கத் தயார் - சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சி யாரை பொது வேட்பாளராக தீர்மானிக்கின்றதோ அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது எனது கடமையாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுமதிமற்றும் ஆசீர்வாதத்துடன் போட்டியிடும் நபருக்கு நான் ஆதரவளிப்பேன்.
தனிப்பட்ட ரீதியில் எவ்வாறான நிலைப்பாடு காணப்பட்டாலும் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுவேன்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது பலமாக அமையும் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடாவிட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார்.
எனினும், கட்சித் தலைமைப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் கட்சியின் பூரண ஆதரவும் அவசியம் என சஜித் பிரேமதாச சர்வதேச ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
.jpg)
Post a Comment