ஊவா மாகாணத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் சத்தியம்..!
இக்கட்டான பல காலக்கட்டங்களில் தாம் சார்ந்த சமூகத்தை உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி சமூகத்தை சரியான திசையில் இட்டுச்சென்ற வரலாறு உலகின் ஏனைய நாடுகளில் நடந்தது போன்று நமது நாட்டிலும் நடைபெற்று வந்திருப்பதை வரலாறு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இந்த வகையில் பதுளை மாவட்ட உலமாக்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் ஏனைய உலமாக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் ஓர் முன்மாதிரியாக அமைந்துள்ளதுடன் அதனை முழு முஸ்லிம் சமூகமும் பாராட்ட வேண்டியதாகவும் அமைந்து விட்டது.
நமது நாட்டின் அண்மைக்காலங்களாக மிகச் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேன போன்ற இனக்குரோத தீவிரவாத அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த எதிர்ப்புப் பிரச்சாரங்களும், வன்முறைகளும், தாமே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டமையும் அவர்களுக்கு எதிராக இந்த நாட்டில் உள்;ள மாமூலான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமையும், நம் எல்லோரையும் மிகவும் துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்து. குறிப்பாக இந்த நாட்டின் சிறு பான்மையிலும் மிகச் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் என்ன செய்வதென்று அறியாது தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தனர்.
இனக்கலவரங்களை ஏற்படுத்தி தென் பகுதியில் வாழுகின்ற முஸ்லிம்களை அவர்களின் பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றுகின்ற ஓர் நச்சுத்தன்மையான எண்ணத்துடன் இனச்சுத்திகரிப்புக்கு அடித்தளம் இட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்தக் கெட்ட எண்ணத்தை அமுல் செயவதற்கென்றே அவர்களால் முன்கூட்டியே தெரிவுச்செய்யப்பட்ட பதுளை, போருவலை, அலுத்கமை போன்ற இடங்களில் கலவரங்களுக்கான காய்களை நகர்த்தி அனர்த்;தங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தினர். இதன் போதும் இவர்களைப் பார்த்து சட்டம் மௌனித்துக் கொண்டே இருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் என்ன செய்வதென்று அறியாது தவித்துக் கொண்டிருந்தது. அரசில் அங்கம் வகித்துக்கொண்டு இதற்கெதிராக குரல் கொடுத்த முஸ்லிம் அமைச்சர்களின் குரல்களோ, எதிர்கட்சியிலே இருந்து கொண்டு எதிர்ப்புக்களை தெரிவித்த பிரதிநிதிகளின் முயற்சியோ அரசின் காதிற்குக்கேட்கவே இல்லை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இவை அனைத்தும் ஆகிவிட்டன. இந்த இக்கட்டான சூழலில்தான் ஊவா மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கபட்டது. பதுளை மாவட்டத்தில் வாழும் மக்கள் ஐக்கியப்பட்டு தேர்தலில் வாக்களிக்கும் பட்சத்தில் மட்டுமே இரு மாகாணசபை உருப்பினர்களை பெற்றுக் கொள்ளாலாம் என்பதை இந்த மாவட்டத்தில் வாழும் உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் நன்குணர்ந்திருந்தனர். அத்தோடு இம்மாவட்ட மக்களே பொதுபல சேனாக்களின் ஆரம்பக்கட்ட அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு அவர்களின் அடாவடித்தனங்களுக்கு முகம் கொடுத்தும் வந்திருந்தனர்.
எனவே பதுளை மாவட்ட முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூக இயக்கங்களும், உலமாக்களும் இந்த நாட்டில் தேசிய ரீதியில் முஸ்லிம்கள் மத்தியில் அரசியலில் ஈடுப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் அவர்களையும் அணுகி ஊவா மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் தனித் தனிக் கட்சியாக களமிறங்கினால் எமக்குக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் அற்றுப்போகும் அபாய நிலை ஏற்பட்டு விடும். அத்தோடு பொதுபல சேனாக்களாலும் பேரின வாதிகளாலும் நொந்துபோயுள்ள ஊவா முஸ்லிம் மக்கள் மத்தியல் முஸ்லிம் அரசியலின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தினால் நமது சமூகம் தாங்கிக் கொள்ளாது எனவே ஐக்கியப்பட்டு ஒரே சின்னத்தில் இரு கட்சிகளும், மேலும் தேர்தலில் விருப்பங்கொண்டுள்ள ஏனைய அமைப்புக்களும் தமது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்தக் கோரிக்கையை இவ்விரு அமைச்சர்களிடமும் தேசிய சூறா சபையின் தலைவர் அவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தடைவைகள் கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இவர்களைச் சந்தித்து வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட இவ்விரு கட்சித் தலைவர்களும், ஊவா கல்வி அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து ஜனநாயக ஐக்கிய முன்னனி எனும் கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் குதித்தனர்.
இவ்வாறான ஒரு கூட்டை கனவிலும் எதிர்பார்த்திராத ஐக்கிய தேசிய கட்சியும், மக்கள் விடுதலை முன்னனியும், அரசின் அமைச்சர்கள் சிலரும் இக் கூட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர். அரசில் அங்கம் வகிக்கும் இவ்விரு அமைச்சர்களின் தலைமையிலான இந்தக் கூட்டானது அரசின் ஆசீர்வாதத்துடன் அரசுக்கெதிரான முஸ்லிம் வாக்குகளை எதிர்கட்சிக்கு செல்லாது தடுக்கவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்று கூறத்தொடங்கினர். இந்தக் கூட்டை விரும்பாத அரசும் இந்த மாவட்டத்தின் நிமால் சிறிபால டி சில்வா என்ற அமைச்சரின் ஊடாக ஒர் செய்தியை வெளியிட்டது. அதாவது 'அரசில் அங்கம் வகிக்கின்ற இரு முஸ்லிம் கட்சித் தலைவர்களான றவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன் ஆகியேரை தனியாக தேர்தல் கேட்குப்படி நாங்கள் தான் ஏற்பாடு செய்திருக்கின்றோம்'.
முஸ்லிம்களின் கூட்டுக் கட்சியின் இரட்டை இலை சின்னத்திற்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் அரசுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளாகும். அந்த வாக்குகளால் தெரிவுச் செய்யப்படுகின்றவர்கள் வழமையைப் போல் ஆட்சியமைந்ததன் பின் அரசின் பக்கமே அமர்ந்து விடுவார்கள் என்பதை ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் ஒருமித்துப்பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். முஸ்லிம்களை வெகுவாகப் புண்படுத்திய பொதுபல சேனாவிற்கும், அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அரசுக்கும் சாட்டையடி கொடுத்து தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தவென தேர்தலை எதிர்பார்த்திருந்த ஊவா வாழ் முஸ்லிம் வாக்காளர்களை மேற்படி செய்திகள் மிகவும் குழப்பத்திற்குள்ளாக்கி கலவரப்படுத்தத் தொடங்கின.
இந்த இக்கட்டான சூழலை தையிரியமாக முகங் கொண்டு அதனூடாக ஊவா முஸ்லிம்களுக்கே உரித்தான இரு பிரதிநித்துவத்தையும் எப்படியும் பெறவேண்டும், அத்தோடு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் சமூகத்திற்கு நற் பணியாற்றும் நல்லவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என எண்ணி இந்த மாவட்டத்தின் உலமாக்கள் அதிரடியாக செயற்படத் தொடங்கினர்.
இதற்கிணங்க கடந்த 01ம் திகதி மு.காவின் தலைவர் றவூப் ஹக்கீம் அமைச்சர் அவர்களையும் அ.இ.ம வின் தலைவர் றிசாட் பதியுதீன் அமைச்சர் அவர்களையும் இரட்டை இலைச் சின்னதில் தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்களையும், மாவட்டத்தின் பள்ளவாசல்கள் நம்பிக்கையாளர்களையும், இதே போன்று உலமாக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், தொழிலதிபர்கள், அனைவரையும் பதுளை நகரசபை மண்டபத்தில் ஒன்று கூட்டி ஓர் முடிவுக்கு வந்தனர்.
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை எவ்வகையிலும் நாம் தவறவிடக்கூடாது. அதற்காக நாம் ஐக்கியமாகவும், விட்டுக்கொடுப்புடனும், சமூக சிந்தனையுடனும் கருமமாற்ற முன்வர வேண்டும். இதற்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்களை முறியக்கும் வகையில் இங்கு கூடியிருக்கின்ற பெருந்தகைகள் முன்னிலையிலும், இந்த இரு அமைச்சர்களின் உறுதிப்படுத்துதலுடனும் சகல வேட்பாளர்களும் பின்வருமாறு ஓர் உறுதி மொழியை வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் வழங்கி அதனை ஒப்புக் கொண்டதாக கையொப்பமிட வேண்டும். 'நான் இத் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் பதுளை மாவட்ட சூறா சபையின் முடிவின் பிரகாரமே எனது அரசியல் நடிவடிக்கைகளை மேற்கொள்வேன். சூறா சபையின் விருப்பத்திற்கு மாறக நான் நடக்க மாட்டேன் என உறுதி உரைத்து கையொப்பமிடுகின்றேன்.' இந்த உறுதி மொழியை சகல வேட்பாளர்களும் மொழிந்து கையொப்பமிட்டனர். மண்டபம் நிறைந்திருந்த மக்கள் கூட்டம் தக்பீர் முழங்கி ஏக மனதாக ஏற்றுக் கொண்டது. இரு அமைச்சர்களும் இதற்குச் சாட்சிகளாக கையொப்பமிட்டனர்.
13 உலமாக்களையும், 12 நம்பிக்கையாளர்கள், புத்திஜீவிகளையும் கொண்ட பதுளை மாவட்ட சூறா சபை சார்பாக உலமாக்கள் கைசாத்;திடப்பட்ட இப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை மேற்கொண்ட பதுளை மாவட்ட உலமாக்கள் அனைவரும் இந்த நாட்டு முஸ்லிம்களின் நன்றிக்குரித்தானவர்களே. சமூகம் இவர்களுடைய இப் பணியை என்றும் பாராட்டிக்கொண்டிருக்கும். முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் ஐக்கியத்தினை ஏற்படுத்துவற்கான தொடக்கப் புள்ளியை இவர்கள் ஊவாவின் பதுளையில் இட்டிருப்பதானது போற்றர்க்குரிய செயலாகும். இந்நிகழ்வுளை தலைமை தாங்கி நாடாத்திய பதுளை மாவட்ட உலமா சபையின் பொருளாளர் மௌலவி அமானுள்ளா, பதுளை அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி ஹிதாயத்துள்ளா, உப அதிபர் மௌலவி றூபிள், ஹாலியல பள்ளிவாசல் இமாம் மௌலவி தாசிம் உட்பட சூறா சபை அங்கத்தவர்கள், நம்பிக்கையாளர்கள் உலமாக்கள் புத்திஜீவிகள் அனைவரும் இந்த நல்ல காரியத்தை மேற்கொண்டதற்காக இரட்டிப்பு நன்றிகளுக்குரியவர்கள்.
2004 முதல் 2008 வரை இவ்வாறான ஐக்கிய நிலை முஸ்லிம் அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேண்டும் என்பதற்காக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் பல்வேறு முயற்சிகளை செய்திருந்த போதும் அப்போது அது நடைபெறவில்லையாயினும் பதுளை மாவட்ட மக்களும், உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும் செய்த முயற்சியை அல்லாஹ் அங்கீகரித்திருப்பதை நினைந்து நாம் எல்லோரும் சந்தோசமடையாமல் இருக்க முடியாது. நடைமுறை அரசியல் வாதிகளின் அநீதிகளை புரியாது மாமாக்களாக மட்டும் நடந்துகொள்ளுகின்ற ஒருசில உலமாக்கள் மத்தியில் பதுளை மாவட்ட உலமாக்கள் இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தை நடத்தி முடித்திருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.
அல்லாஹ்வே எல்லாவற்றிற்கும் போதுமானவன்.
எஸ்.எல்.எம். ஹனிபா மதனி
ஊடகப் பணிப்பாளர் ஸ்ரீ.ல.மு.கா.
எதிர்க்கட்சித் தலைவர் அக்கரைப்பற்று மாநகர சபை.
.jpg)
Oh Muslims keep one thing in your mind firmly, These two men are Government Ministers, They are trying their best to take Muslims votes to put Mahinda's pocket.
ReplyDeleteDont get cheated, cast your votes to any parties other than Rauf and Mahinda & Co.
Assalamu alaikum .we are muslim try to be together.
ReplyDeletei support for this we should show our power this is the opportunity to build our strength
ReplyDelete