முஸ்லிம்கள் சார்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், இஸ்லாத்தை பின்பற்றுவதால் இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும், இதுதொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை சர்வதேச வை.எம்.எம்.ஏ. அமைப்பு மேற்கொண்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளமையால் தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இதுபற்றி முறையிட தீர்மானித்துள்ளதாக வை.எம்.எம்.ஏ. அமைப்பின் தலைவர் அஸ்ரப் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு அண்மை காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகள், மறுக்கப்பட்ட உரிமைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் ஆவன அறிக்கைகளை தயாரித்துவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்,
.jpg)
Weldone mr ashraf hussain.
ReplyDeletePlease hurry up and Do it without failier
மிக மிக நல்ல விடயம். எந்த சக்திக்கும் தயங்காது அல்லது பேரம் போகாது இறைவனுக்காக இதனை செவ்வனே செய்து முடிக்க எங்களது வாழ்துக்கள்.
ReplyDeleteஇடையிடையே தடங்குகளும் மிரட்டல்களும் இலஞ்சங்களும் உங்களை வந்தும் சேரலாம்,எதற்கும் தயங்க வேண்டாம்.இப்படியான உள உதிப்பை தந்தவனும் இறைவனே,அப்படிப்பட்ட இந்த காரியத்தை மீண்டும் ஒருமுறை நன்கு சிந்தித்துகூட பார்க்கவேண்டும் என எண்ணிவிடவேண்டாம்,சிந்தித்துப்பார்ப்பதற்கு பதிலாக நேரிடையாகவே பல காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்,அதுவே போதும்.
தனக்கு மட்டுமல்ல,தன் சமுதாயத்திற்கு நடக்கும் அனீதிகளைக்கூட முடிந்தளவில் எதிர்த்துப்போராடுவது இறைவழி/ஜிகாத்தாகும்.யாரெல்லாம் சக்தி இருந்தும் சந்தர்ப்பம் இருந்தும் இப்படி முடிந்தளவில் இறைவனுக்காக பாடுபடவில்லையோ,நிச்சயம் நாளை இதைவிட பெரிய ஜெனீவா மானாடு மறுவுலகில் நடக்கும்,அங்கு இப்படியான அறிவு,பணம்,பலம், என்னவெல்லாம் இறைவனின் அருட்கொடைகளாக கொடுக்கப்பட்டதோ,அவைகளை இறைவனுக்காக செலவு செய்யாதவர்கள்,நிச்சயம் பதில் சொல்லியேயாகவேண்டும்.
எவன் ஒரு அனுவளவேனும் நன்மை செய்தானோ அதை அவன் அங்கு கண்டுகொள்வான்,எவன் அனுவளவேனும் தீமை செய்தானோ அவனும் அங்கு அதை கண்டுகொள்வான்(சூரா- ஷில்ஷால்)
ஓடு மீன் ஓட ஒரு மீன் வருமளவு காத்து நிக்குமாம் கொக்கு. இதனை தமிழ் மக்கள் செய்கிறார்கள். சந்தர்ப்ப்ம் கிடைக்கும் போது பேசிவிடுகின்றனர்.
ReplyDeleteஇன்னும், பல முட்டைகளை இட்டுவிட்டு எதுவும் செய்யாது போல் ஆமை இருப்பது போல் ஊமையாக இருந்து பல விடயங்களைச் சாதிக்கின்றனர் வேறு அரசியல் வாதிகள். ஜனாதிபதியும் அவ்வாறுதான், ஊமையாட்டமிருந்து முஸ்லிம்களுக்குக் குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்.
நமது முஸ்லிம்களோ! பெட்டைக் கோழி வேஷம் போடுகின்றனர்.
ஆனால் கோழியாவது முட்டையை இட்டுவிட்டுத்தான் கொக்கெரிக்கிறது.
ஆனால் நம்மவர்களோ, எதையும் சேய்யாது ஆட்டைக் கட்டப்போகிறேன், மாட்டைக் கட்டப்போகிறேன் என ஆட்டம் போடுவார்கள் பிறகு எல்லாமே புஷ் வானமாகிவிடும்.
முஸ்லிம்களுக்குறிய அடையாள அட்டை விடயமாக பிரதியமைச்சர் ஒருவர் என்னமெல்லாம் பேசப்போகிறேன் என்றார், பிறகு அது பற்றிய சப்தமேயில்லை.
இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுபவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப்போவதாதக ஒரு கூட்டம் முழக்கமிட்டது இறுதியில் அதுவும் புயலில் சிக்கிவிட்டது போல் மடிந்துவிட்டது.
இப்போது புதியதொன்று முளைத்திருக்கிறது. அது எப்போது பெரிய இடத்தால் கிள்ளியெறியப்படப்போகிறதோ தெறியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
Mr. Ashraff Hussain, you don't advertise these kind of actions before you do it! Submit your complaints officially, then inform the media.
ReplyDeleteLast time you said you were going to complain to UNHRC. Then Gota contacted you and the news went off the media. Is this is a game? I wonder!