சாய்ந்மருதுவில் விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு
(ஹாசிப் யாஸீன்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களைக் கையளிக்கு நிகழ்வு இன்று 19-02-2014 சாய்ந்மருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய், நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், முகாமைத்துவ உதவியாளர் எம்.சமூன் உட்பட விளையாட்டுக் கழக வீரர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகர பிரதி முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் வேண்டுகோளின் பேரில்; சாய்ந்தமருது ஸ்டார் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவிற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரினால் ஐம்பதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்போது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்டார் லீடர்ஸ் விளையாட்டுக் கழக வீரர்களிடம் விளையாட்டு உபகரணங்களை கையளித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் எமது கழகத்தின் வளர்ச்சியையும் வீரர்களின் விளையாட்டு திறமையையும் கருதிற்கொண்டு விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுத்தர காரணகர்த்தாகவிருந்த கல்முனை மாநகர பிரதி முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், நிதி ஒதுக்கீடு செய்து தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் இதனை ஒழுங்கு செய்து தந்த சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய் ஆகியோருக்கு ஸ்டார் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் றியாத் ஏ. மஜீத் நன்றிகளை தெரிவித்தார்.

Post a Comment