Header Ads



பெண்களிடம் பேசுவதற்கே அச்சமாக உள்ளது - இந்திய அமைச்சர் பரூக் அப்துல்லா


(Inn) 
பெண்கள் குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தனது கருத்திற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

"சமீப காலங்களில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.  சமூகம் அப்படி மாறியிருக்கிறது. பெண் உதவியாளரை நியமிக்கலாமா என்பது குறித்து ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவு எடுக்க வேண்டியதிருக்கிறது. நான் பெண் செயலர்களை வைத்து கொள்ள மாட்டேன். பெண்களிடம் பேசுவதற்கே அச்சமாக உள்ளது.  

அவ்வாறு பேசினால் சிறைக்குச் செல்லும் நிலை வந்து விடுமோ என்ற பீதியும் உருவாகியுள்ளது" என்று மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கருத்துத் தெரிவித்திருந்தார்.  இதற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பாருக் அப்துல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பரூக் அப்துல்லா மகன் ஒமர் அப்துல்லா தனது தந்தை பேசியது தவறு என்றும், அதற்காக அவர் மன்னிப்பு கோருவார் என தான் நம்புவதாகவும் கூறினார்.  இதனிடையே தாம் தெரிவித்த கருத்துக்களுக்கு பாருக் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.