Header Ads



இராணுவ ஆட்சிக்கு விரைவில் முடிவு - மகன் உஸாமாவுக்கு எழுதிய கடிதத்தில் முர்ஸி

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு விரைவில் முடிவு ஏற்படும் என்று சதிப் புரட்சியால் வெளியேற்றப்பட்ட அந்நாட்டின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார்.

தன் மகன் உஸாமாவுக்கு எழுதிய கடிதத்தில் முர்ஸி இதனை தெரிவித்துள்ளார். தலைநகரான கெய்ரோவில் இருந்து 245 கி.மீ தொலைவில் உள்ள அல் மின்ஆவில் நடந்த கண்டனப் பேரணியில் உரையாற்றும்போது உஸாமா, தன் தந்தையின் கடிதத்தை வாசித்தார்.

எகிப்திய மக்களுக்கும், இராணுவ சர்வாதிகார அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் முர்ஸி வாழ்த்து தெரிவித்துள்ளார். முர்ஸி தனது கடிதத்தில்,”இராணுவ அரசுக்கு எதிராக போராடியவர்கள் சிந்திய இரத்தம் வீணாகாது. அவர்களின் இலட்சியம் நிறைவேறும்” என்று தெரிவித்துள்ளார். Thoo

1 comment:

Powered by Blogger.