கண்டி மாவட்ட மக்களுக்கு நான் கடனாளியாகிவிட்டேன் - அஸாத் சாலி
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட என்னை அமோக வெற்றியீட்ட வழிவகுத்;த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனுக்கே முதலில் எனது நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு மூலக் காரணமாக அமைந்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாகாண சபை தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லிம் மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் வாக்களிப்பதில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு உற்சாகத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. நமது சகோதரர்கள் பலர் எமது கோரிக்கையை ஏற்று தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு வாக்களிப்பில் உற்சாகமாக பங்கேற்றதையும் நான் அவதானித்தேன். இந்த ஆதரவு என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. இந்தத் தாய்மாரினதும் சகோதர சகோதரிகளினதும் பேராதரவின் பலனாகத்தான் இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளைவிட அதிகளவு விருப்பு வாக்குகளை என்னால் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது என்பதை நான் நன்கு அறிவேன்.
கண்டி மாவட்ட மக்களுக்கு நான் கடனாளியாகிவிட்டேன்.அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு சேவை செய்து,அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து இந்தக் கடனை கழிக்க நான் உறுதிபூண்டுள்ளேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி அரசுக்கும் அதன் பங்காளியான முஸ்லிம் காங்கிரஸிற்கும் வாக்களித்து தொடர்ந்தும் தம்மை அறியாமலேயே தவறு செய்துள்ள அப்பாவி மக்களும், பாதிக்கப்படும் போது நிச்சயம் நான் அவர்களின் பிரதிநிதியாகவும் செயற்படுவேன்.
கண்டி மாவட்ட மக்கள் எந்த நேரத்திலும் என்னோடு தொடர்பு கொள்ளலாம். எனது பிரதிநிதிகளாக உங்கள் பகுதிகளில் பணியாற்றிய எனது உதவியாளர்கள் மூலமாகவும் நீங்கள் என்னோடு தொடர்பு கொள்ளலாம். ஒரு மாகாண சபை உறுப்பினரால் அதுவும் ஒரு எதிர்க்கட்சி மாகாண சபை உறுப்பினரால் மக்களுக்கு எந்தளவு சேவைகளை செய்யலாம் என்பதற்கு நான் எடுத்துக் காட்டாத் திகழ்வேன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த வெற்றிக்காக என்னோடு இரவு பகலாக சரியான ஊண் உறக்கம் இன்றி, எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி பெரும் தியாகத்தோடு பணியாற்றிய எனது ஆதரவாளர்கள், அதிகாரிகள், அபிமானிகள், அனுசரணையாளர்கள் என எல்லோருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்மீது நம்பிக்கை வைத்து பிரதேச வாதம் பார்க்காமல் என்னை உங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்தமைக்காக கண்டி மாவட்ட மக்களுக்கு மீண்டும் எனது நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன். நீங்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயம் நான் காப்பாற்றுவேன். தொடர்ந்தும் உங்கள் பேராதரவையும் அன்பையும் வேண்டி நிற்கின்றேன்.
மத்திய மாகாண சபையில் உங்களுக்காக எனது குரல் கனீரென ஒலிக்கும்
அந்தக் குரல் இனவாத சக்திகளுக்கு சாவு மணியாக இருக்கும்.
அந்தக் குரல் தேசிய ஐக்கியத்துக்கான மங்கள நாதமாக ஒலிக்கும்.
அந்தக் குரல் உங்கள் விடிவுக்கான அத்திவாரமாக அமையும்.
என்றும் உங்கள் உண்மை நண்பன்
அஸாத் சாலி
தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ReplyDeleteநான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 3729)
maasha allah we appreciate your victory warmly welcoming you for the muslim community
ReplyDeleteAlhamthulillah Very happy good success sir you may try to follow Marhoom Asraf sir way people accept you it will bring you up definitely. and also be a kind person.
ReplyDeleteஇதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் அநாதையாக இருந்த கண்டி மாவட்ட மக்களுக்கு ஒரு சிறு ஒளிக்கீற்றாக வந்த உங்களை இவர்கள் தன் மகனாக, சகோதரனாக, தோழனாக மதித்து வெற்றி பெற செய்துள்ளார்கள், ஏனைய முஸ்லிம் அரசியல் வியாபாரிகளை விட சற்று வித்தியாசமான உங்களிடம் நிச்சயமாக மக்கள் பெரும் எதிர்பார்பை வைத்துள்ளார்கள்.
ReplyDeleteBr. Azad you deserve for this. My best wishes and good luck for your journey for our community
ReplyDeleteMasha allah
ReplyDeleteAlhamthulillah.., Wish you all the best. Thank you for voters ( good decision and true freedom fighters )
ReplyDelete