Header Ads



இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்தவன் விடுதலை

(Tn) சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பிய இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்த நகவ்லா பஸ்ஸவி நகவ்லா அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் இஸ்லாம் பற்றி மேலும் ஆவணங்கள் தயாரிப்பதாகவும் நகவ்லா உறுதி அளித்துள்ளார்.

யூடியுப் இணையத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நகவ்லாவின் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்ற திரைப்படத்தால் முஸ்லிம் உலகெங்கும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். எனினும் அவர் தற்போது கண்காணிப்பு நிபந்தனையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் டெய்லி செல்லர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், தாம் உலகுக்கு உண்மையை காண்பித்ததாக கூறியுள்ளார். தனது கண்காணிப்பு காலத்தில் விதிகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டுக்காகவே நகவ்லா கைதுசெய்யப்பட்டிருந்தார்.

‘எனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். ஏனையவர்கள் போன்று அவர்களும் தீவிரவாத கலாசாரத்தை ஏற்பதில்லை. எமது எதிர்கால சந்ததிகளுக்காகவும் எமது நாகரிகத்திற்காகவும் இந்த கலாசாரத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்’ என்று நகவ்லா குறிப்பிட்டார்.

‘இது ஆயுதத்தாலான யுத்தமல்ல. சிந்தனை யுத்தம். இந்த கலாசாரத்திற்கு வெகு விரைவில் முடிவு கட்டாவிட்டால் உலகம் பெரும் அபாயத்தை எதிர்நோக்கும் என்பதையே நான் கூறியிருந்தேன்’ என்றார். தனது சர்ச்சைக்குரிய திரைப்படத்தை மையமாகக் கொண்டு தற்போது தாம் ஒரு புத்தகத்தை எழுதிவருவதாக நகவ்லா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.