மஹியங்கனை + பங்கரகம்மன்ன முஸ்லிம்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள்..!
மஹியங்கனையை அடுத்துள்ள பங்கரகம்மன்ன என்ற பகுதியில் 700 க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் அங்குள்ள முஸ்லிம்களையும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்வதாக அந்த ஊர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்று தராவிஹ் தொழுகை நேரங்களில் 8 வாகனங்களில் வந்த பொதுபல சேனாவை சேர்ந்தவர்கள் ஊரைச் சுற்றி நோட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2 ஆம் திகதி பொதுபல சேனாவின் மாநாடு மஹியங்கனையில் நடைபெறவுள்ள நிலையில், அப்பிரதேசமெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பிரதேச அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டு செல்லவே பட்டப்பகலில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அத்துடன் மஹியங்கனையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து தகவலகள் சேகரிக்கும் பணியையும் சிலர் மேற்கொளவ்தாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள முஸ்லிம்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென பங்கரகம்மன்ன பள்ளிவாசல் நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளதாக பிரதேச முக்கியஸ்தர்கள் எமது இணையத்திடம் தெரிவித்தனர்.

Post a Comment