பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சிகள்
(ரீ.கே. றஹ்மத்துல்லா)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மட்டத்திலான ஜூனியர் முதலுதவிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலிருந்து ஒலுவில் அல்ஹம்றா வித்தியாலயம், பாலமுனை மின்ஹாஜ் வித்தியாலயம் மற்றும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் ஆகியன தெரிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கான முதலுவிப் பயிற்கள் வழங்கப்பட்டு வருவதாக ஜூனியர் முதலுவிப் பயிற்சிக்கான வளவாளர் ஐ.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கமைய அட்டாளைச்சேனை அறபாவித்தியாலத்தில் நேற்று முன்தினம் (11) தெரிவு செய்யப்பட்ட முப்பது மாணவர்களுக்கான இரண்டு நாள் முதலுதவிப் பயிற்சிப்பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது. அதிபர் கிதுறு முகம்மட் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி அதிபர், பகுதி பொறுப்பாசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விரண்டு நாள் பயிற்சிப்பட்டறையின் போது விபத்து முகாமைத்துவம், இரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தல், காயம் மற்றும் மயக்க நிலைகளில் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், செயற்பாடுகள் போன்றன பற்றிய விரிவுரைகளும், செயன் முறைப்பயிற்சிகளும் வளவாளரினால் நடத்தப்பட்டன.

Post a Comment