Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஹலால் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது


(J.M.Hafees)

முஸ்லிம் உலகம் கடந்த 1400 வருடங்களாக வாழ்ந்து வரும் அனுமதிக்கப்பட்ட வாழ்கைதான் 'ஹலால்' என்பதை எல்லோரும் புரிந்து கொண்டால் ஹலால் பற்றிய பிரச்சினை ஏற்பட இடமில்லை என ஜனாதிபதி ஏற்றுக் கொண்டடதாக மாத்தலை மேயர் ஹில்மி கரீம் 23-02-2013 அன்று தெரிவித்தார்.

1400 வருடங்களுக்கு முன்பிருந்தே முஸ்லிம்கள் தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் ஒரு நெறிமுறையே 'ஹலால்' என்பதாகும். இதனை ஒரு புதிய விடயமாகத் தூக்கிப்பிடிக்க ஒரு சில தீய சக்திகள் முற்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினது இணை அமைப்பாளரும், மாத்தளை நகரபிதாவுமான அல்ஹாஜ் ஹில்மி முகமட் கரீம் அவர்கள் தெரிவித்தார்

கண்டி ஜனாதிபதி மாளிகையில் மாத்தளை  மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுடன் இடம் பெற்ற ஒரு சந்திப்பின் போதே நகர பிதா இது விடயமாக ஜனாதிபதியிடம் தெரிவித்தார்

அவர்மேலும் தெரிவித்ததாவது,

உலகம் உருவாக முன்னரே ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களுக்கு நல்லது கெட்டது என இரு பிரிவை இறைவன் அறிவித்து கற்றுக் கொடுத்தான். அதாவது மனிதனுக்கு அனுமதிக்கப்ட்டவை இவை இவைதான் என்றும் இன்னும் சிலதை அனுமதிக்கவில்லை என்றும் அறிவித்திருந்தான். இதன் அடிப்படையில் நல்லதையும் தீயதையும் பிரித்தறியும் அறிவு மனித சமூகத்திற்கு காலத்திற்குக் காலம தூதர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுவந்தது. இறுதியாக இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமும் நல்லதும் கெட்டதும் பிரத்தறிவிக்கப்பட்டது.

இதில் நல்லது அல்லது அனுமதிக்கப்ட்டது என்பதே  'ஹலால்' என்பதாகும். எவை அனுமதிக்கப்படவில்லையோ அவை ஹராம் என்று விளக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் அரபு மொழியில் இருப்பதன் காரணமாக அரபியில் ஹலால், ஹராம் என்ற சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன. மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டதை ஹலால் என்றும் அனுமதிக்கப்படாததை ஹராம் என்றும் முஸ்லிம்கள் கூறுவர். இது இன்று நேற்றல்ல 1400 வருடங்களாக முஸ்லிம்கள் பின்பற்றும் ஒரு வாழ்க்கை நெறி. ஆனால் சிலர் இதற்கு வேறு அர்த்தம் கற்பித்து இன்று முஸ்லிம்களை பிரச்சினைக்கு மத்தியில் சிக்கவைக்கமுயற்சிக்கின்றனர்

உணவில் உள்ள ஹலால் பற்றி மற்றும் பேசி சிக்கலை உருவாக்குகின்றனர். ஒரு முஸ்லிம் உலகம் கடந்த 1400 வருடங்களாக வாழ்ந்து வரும் அனுமதிக்கப்பட்ட வாழ்கைதான் ஹலால் என்பதை அழகுறக் கூறியும் புரிந்து கொள்ளாமை கவலை தருகிறது என்று அவர் எடுத்துக் கூறினார். 

இவற்றையெல்லாம் அமைதியாக செவிமடுத்த ஜனாதிபதி மஹிந்த, இதை யாவரும் புரிந்து கொண்டால் பிரச்சினையே இல்லை என கூறியதாக  மாத்தலை மேயர் ஹில்மி கரீம் தெரிவித்தார். இத்தூதுக் குழுவில் மாத்தலை மேயர் ஹில்மிகரீம், ஊடக இணைப்பாளர்.எஸ்.எச்.எம்.நியாஸ் உற்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.


6 comments:

  1. Fentastic dobule acting

    ReplyDelete
  2. இதை உலமா சபை செய்யவில்லையா? இருந்தாலும் மேயருக்கு நன்றி. இதை விளக்குவதை போல இஸ்லாத்தையும் விளங்க வைத்தால். ஒரு வேலை இன்ஷா அல்லாஹ மகிந்த இஸ்லாத்தை தழுவலாம் ......

    ReplyDelete
  3. நன்றி மேயரே,

    ஹலாளுக்கான உமது விளக்கம் - இரத்தின சுருக்கம் .

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Please don´t blame ulama council they doing their best always.

    ReplyDelete
  5. ஓஹோ ஜனாதிபதிக்குத் தெரியாததொன்ரை ஹொல்மி கரீம் சொல்லி விட்டார்.அவரும் ஏற்ற்றுக் கொண்டு விட்டார். இப்போ பொது பல சேனவிடம் சொல்லி எல்லாம் நிருத்திடுவார். மேயர் அவகலே உன்கலை நீங்கல் ஏமாற்ரிக் கொல்லலாம் உங்கலால் அல்லாஹ்வையும் எங்கலையும் ஏமாற்ற முடியாது

    ReplyDelete
  6. உண்மையைச் சொன்னீர்கள் மஹ்தி ஹஸன் அவர்களே!,திரு ஹில்மியே திருவாய் மலர்ந்ததுக்கு வாழ்த்துக்கள் இருப்பினும் நீரும் இன்னும் உம்மைப்போன்ற அரசியல் வாதிகளுக்கும் ஒரு பகிரங்க வேண்டுகோள் முதலில் தூயஇஸ்லாம் பற்றி படித்துக்கொள்ளவும் அதுவே போதுமாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.