லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை முஸ்லிம் மாணவனுக்கு கௌரவம்
2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான சுடரை நேரில் காணும் வாய்ப்பு இலங்கையின் இரண்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கமைய குறித்த இரண்டு மாணவர்களும் நாளை இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் சுடர் டரம் மாநிலத்திற்கு கொண்டுவரப்படுகின்ற தினத்தில் அதனை கொண்டாடும் வகையில் அங்கு சர்வதேச இளையோர் விளையாட்டு விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட 480 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
இந்த விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை கண்டி சில்வெஸ்டர் கல்லூரியின் இசுறு டில்ஷான் மற்றும் மொஹமட் அசார்டீன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான சுடரை சில நிமிடங்கள் கரங்களில் ஏந்தும் வாய்ப்பும் குறித்த இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இசுறு டில்ஷான், மொஹமட் அசார்டீன் ஆகியோர் உள்ளிட்ட வீர வீராங்கனைகளுக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment