Header Ads



தமிழரசுக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக ஆர்.எம். இமாம் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக இரா.சம்பந்தனும் பொதுச் செயலாளராக மாவை சேனாதிராஜாவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அக்கட்சியின் 14 ஆவது தேசிய மகாநாடு மட்டக்களப்பு ஊரணி அமெரிக்க மண்டபத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் சனிக்கிழமை இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தின் போதே இவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவர்களாக ரி.எஸ்.சூசைதாசன், கே.துரைரட்ணசிங்கம், ஈ. சோமசுந்தரம், டேவிட் நாகநாதன், ஆர்.எம்.இமாமும் இணைப் பொருளாளராக எஸ்.தியாகராஜா மற்றும் பே.கனகசபாபதியும் தெரிவு செய்யப்பட்டனர்.
11 பேர் கொண்ட செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2 comments:

  1. உப தலைவர்களில்ஒருவராக தெரிவு செய்ததில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.வேறு பதவிகளுக்கு முஸ்லீம்களில்வேறு யாரையாவது தெரிவு செய்யும்போது படிப்பு,பணம்,போன்ற பின்புலத்துடன் மார்க்க அறிவையும் பார்த்துக் கொள்ளுங்கள்.மார்க்கம் தெரிந்தவர் உங்களுக்குள் இருக்கும் போது சில சில மார்க்க விரோத விடயங்களை நடக்க உதவியாக இருக்கும்.
    Meraan

    ReplyDelete
  2. தலைவராகத்தேர்ந்தெடுக்காவிட்டாலும் பரவாயில்லை தனடமானப்போராட்டத்தில் ஒன்று சேர்ந்தால் அதுவே போதுமானது.

    ReplyDelete

Powered by Blogger.