ஈரானின் பணத்தை திருப்பிக் கொடுத்ததா UAE..?
ஈரானுக்கு முடக்கப்பட்டிருந்த 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் வருவாயை ஐக்கிய அரபு அமீரகம் விடுவிக்கவுள்ளது. இதில் 3 பில்லியன் டாலர் ஏற்கனவே சமீபத்தில் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தொகை 20 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும், போரின் இறுதி வாரங்களில் ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்காமல் இருப்பதற்கு ஈடாக இதன் ஒரு பகுதிக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் தகவலறிந்த மற்ற 2 வட்டாரங்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.
எனினும் இந்தத் தகவலை UAE தரப்பு மறுத்துள்ளது

Post a Comment