தேசப்பற்றாளர்கள் வாழும் முஸ்லிம் சமூகத்தை நாம் மதிக்கிறோம் - ஞானசார தேரர்
முஸ்லிம் சமூகத்தை நாம் மனதார நேசிக்கிறோம். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழும் முழு உரிமை உண்டு. ஆனால், அதற்குள் மறைந்திருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் தீர்க்கமாக தோற்கடிக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்தார்.
சுரேஷ் சலே ஒரு முஸ்லிம் இனத்தவர் என்ற போதிலும், ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் அவருக்காக மகா சங்கத்தினர் முன்னின்றதையிட்டு பெருமையடைகிறோம். அவர் முஸ்லிம் என்பதற்காக அவரை எம்மால் நிராகரிக்க முடியாது.
கடந்த காலத்தில் கேணல் முத்தாலிப் போன்ற பல மலே இன முஸ்லிம் தலைவர்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தேசப்பற்றாளர்கள் வாழும் முஸ்லிம் சமூகத்தை நாம் மதிக்கிறோம்.
முஸ்லிம் சமூகம் என்பது வேறு, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Post a Comment