உடல், மன ரீதியான தண்டனைகளையும் வழங்க முடியாது - உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட் டிக்காட்டி கல்வியமைச்சு அறிக்கை
பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன ரீதியான தண்டனைகளையும் வழங்க முடியாது எனத் தெரிவித்து கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்கள், அனைத்து அதிபர்களுக்கும் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தண்டனை வழங்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த புதிய சுற்றறிக்கையின் விதிகளும் இனிமேல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எந்தவொரு மட்டத்திலும், எந்தவொரு வடிவத்திலுமான உடல் ரீதியான தண்டனைகளை வழங்க முடியாது. இந்த விதிகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

Post a Comment