அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு கூடியது
அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது. மார்ச் 31 ஆம் திகதிவரை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு 42% டீசலை சேமித்துள்ளது.
ஏப்ரல் 07 மற்றும் 09 ஆம் திகதிகளில் பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவம் குறித்த தெளிவூட்டல் வேலைத்திட்டங்கள்
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

Post a Comment