Header Ads



முன்னாள் அமைச்சரின் மகனை பிடிக்குமாறு உத்தரவு


ஸ்ரீலங்கன் எயார்பஸ் கொள்வனவின் போது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்  பெயரிடப்பட்டுள்ள  ஷமீந்திர ராஜபக்ச (முன்னாள் அமைச்சர் சமலின் மகன்) மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இந்த உத்தரவை வழங்கினார்.


இந்த உத்தரவை இலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகை தந்தால், அவர்களை உடனடியாகக் கைது செய்து கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.