Header Ads



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியினால் நியமனம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார்.


கடந்த மூன்று தடவைகள் இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலில் வேல்நம்பி முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார்.


1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார்.

No comments

Powered by Blogger.