சமூக ஊடகங்களில் உணவு உட்கொள்ளும் வீடியோவை பதிவிட்டவருக்கு ஏற்பட்ட விபரீதம்
சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் வலிப்பு, உதடுகள் நீல நிறமாக மாறுதல் அறிகுறிகளுடன் அவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
தான் பிடித்த நண்டுகளைத் தேங்காய்ப் பாலில் சமைத்து உண்பதை அவர் தனது டிக்டொக் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்காகப் படம் பிடித்துள்ளார். உணவு உட்கொண்ட அடுத்த நாள், நண்டிலுள்ள நச்சுத்தன்மை காரணமாக அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரது வீட்டுக் குப்பையில் பிரகாசமான நிறம் கொண்ட நண்டுகளின் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்களை இத்தகைய நண்டுகளை உண்ண வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Post a Comment