சுவீடனில் உள்ள இலங்கையரின் மனிதாபிமானம்
பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு, சுவீடனில் வசிக்கும் சமையல் கலைஞரான இலங்கையர் ஒருவர் 4.2 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார். தனது உணவகம் மூலம் கிடைக்கும் வருமானத்தையு, சுவீடன் மக்களின் மூலம் கிடைத்த பணத்தையும் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நாட்டு மக்கள் சோகமாக இருக்கும் போது, நாம் இருக்கும் இடத்திலிருந்தே உதவ வேண்டும். இந்த உன்னத முயற்சிக்கு சுவீடன் மக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது. தொலைவில் வாழ்ந்தாலும், தங்கள் தாயக மக்கள் மீதான ஆழமான அக்கறை காரணமாக இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த உதவி மனப்பான்மை புலம்பெயர் சமூகத்தின் நாட்டுப்பற்று, மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்துள்ளனர்.

Post a Comment