Header Ads



ஆபாச படம் காண்பித்து சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட 5 நபர்கள்


ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த   தந்தை உட்பட ஏனைய 5 நபர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த சம்பவத்துடனான  வழக்கு சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில்  கடந்த வெள்ளிக்கிழமை (12)  அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தந்தை  உட்பட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.


அத்துடன்  அன்றைய தினம் சந்தேக நபர்களான    தந்தை, தாய்  தவிர ஏனைய 4 சந்தேக நபர்களையும்   அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.


இதே வேளை    குறித்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


(தமிழ் மிரர்)

No comments

Powered by Blogger.