Header Ads



இனவாத வலைகளில் சிக்கி...


 நாம் வாங்கும் காலெக்ஸி அல்லது ஐபோன் ஒன்றின் சேர்மானப் பொருட்களுக்கான செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா? ஒரு டாலர் கூட செலவாகாது, தெரியுமா? 


ஆனால் நாம் அதனை பல நூற்றுக்கணக்கான டாலர்கள் கொடுத்து வாங்குகிறோம். காரணம், அதிலே மனித அறிவியல் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திகள் உள்ளன என்பதாகும். 


நாம் வாழும் நவ யுகத்தில் தொழில்நுட்ப வளங்களையும் அறிவியல் வளங்களையும் பயன்படுத்தும் சமூகமே நாகரீகமான சமூகமாக கருதப்படும். மண்ணுக்கடியில் என்ன உள்ளது, எப்போது வெளிவரும் என்று காத்திருக்கும் சமூகங்கள் பின்தங்கிய சமூகங்களாகவே கருதப்படும். இது மனித புத்திகள் புரட்சி செய்யும் யுகம்! பெளதீக வளங்களை விட தொழில்நுட்ப வளங்கள் ஆதிக்கம் செலுத்தும் யுகம். 


சாம்சுங் போன்ற பெரு நிறுவனத்தின் ஓராண்டின் இலாபம் 327 பில்லியன் டாலர்களை தாண்டுகின்றன. அதேவேளை இவ்வளவு பாரிய தொகையை ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் மூலம் சேகரிக்க பல ஆண்டுகள் பிடித்துவிடும். 


நாம் வாழும் தொழில்நுட்ப யுகத்தில் மனித புத்தியும் அவனது அறிவியல் ஆற்றல்களுமே மிகவும் வெற்றிகரமான முதலீடாக மாறிவிட்டன. 


புத்தி வளத்தை பாவிக்காமல் செல்வ வளம் தங்களை பாதுகாக்கும் என்று கங்கணம் கட்டும் ஏமாளிகளே! உங்கள் மனக்கோட்டைகளை உடைத்துவிடுங்கள்! இது அறிவியல் புரட்சி யுகம், புத்தியோடு வாழ்ந்தால் தப்பித்து வாழ முடியுமான யுகம். 


இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படுமோசமாக தோற்கடிக்கப்பட்டது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்குள் அது அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் புரட்சியால் உலகைப் பழிவாங்கியது.


ஆனால் நாம் இன்னும், நீ எந்த சாதி? அவன் என்ன கோத்திரம்? உன் மொழி என்ன? என்ற இனவாத, பிரதேசவாத, தேசிய வாத வலைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றோம். 


✍ டாக்டர் ஃபரூக் அல்-காசிம் / ஈராக்கிய புவியியலாளர்

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.