சிங்கள வைத்தியர்கள், நாட்டைவிட்டு ஓடும்போது...??
- Shamila Zainul Abdeen -
இன்று ஆபிஸில் சில மாற்று மதத்தினர் கேட்ட பிறகு தான் இந்த விடையத்தை நானும் தெரிந்து கொண்டேன். காலையில் இன்றைய -25- நாளேடுகளில் சென்ற ஒரு news பற்றி கேட்டார்கள்.
முழுப் பெயர் ஊடகங்களில் பிழையாக உச்சரிக்கைபட்டாலும், (Hiru வில் - பாஹிமா சஹீப்தீன், Derana வில் - பாஹிமா ஷஹாப்தீன்) அவர்களுக்கு ஏதோ ஷஹாப்தீன் என்று தான் விளங்கியிருக்கிறது.
என்னிடம் வந்து கேட்டார்கள் இந்த பாஹிமா ஷஹாப்தீனும், ஷாபி ஷஹாப்தீனும் சகோதரர்களா என்று. நான் இல்லை என்று சொன்னேன்.
ஏன் என்று கேட்ட பிறகு, இல்லை இந்த ஷஹாப்தீன் பெயரில் உள்ள வைத்தியர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றார்கள்.
எங்களுடைய சின்ஹல வைத்தியர்களே நாட்டை விட்டு தப்பி ஓடும் போது, உங்கள் வைத்தியர்கள் மட்டும் ஏன் இப்பிடி இருக்கிறார்கள் என்று கேட்டார்கள்.
நான் சொன்னேன், எனக்கும் தெரிந்த நிறைய முஸ்லிம் வைத்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால் உங்களது சமூகத்தை சார்ந்தவர்கள் ஏன் போகிறார்கள் என்று தெரியாது என்று கேள்விக்குறியாய் கேட்டேன்.
திட்ட ஆரம்பித்தார்கள். நம்மடவர்கள் சுயநல வாதிகள். உங்களது ஆட்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் தானே என்றார். நான் சரி, பிழை என்று எதுவும் பேசவில்லை. அப்படியே மௌனமாக இருந்தேன்.
ஹம்தி என்ற சிறுவனின் விடையத்தை அவர்களுக்கு நினைவுப்படுத்தினேன். தவறை செய்த அந்த வைத்தியர் நாட்டை விட்டே தப்பிச் சென்றார்.
ஆனால் தவறே செய்யாத Dr ஷாபி போன்றவர்கள் பல கஷ்டங்கள், அடக்குமுறைகள், பாரபட்சம், இன்னல்களுக்கு மத்தியிலும் தான் தவறே செய்யவில்லை என்பது நிரூபணம் ஆன பிறகும் தாய் நாட்டை விட்டு ஓடாமல் நாட்டுக்காக இன்றும் சேவை செய்கிறார்கள் என்று சொல்லி முடித்தேன்.
திருப்பி எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போனார்கள்

Post a Comment