இலங்கை மாணவர்கள், குவைத்தில் கௌரவிப்பு
இந்திய அரசாங்கத்தின் Central Board of Secondary Education (CBSE) மூலம் நடாத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்புக்களுக்கான பரீட்சைகள் இவ்வருடம் மார்ச் மாத இறுதியில் நடந்து முடிந்தன. 26 க்கும் அதிகமான நாடுகளில் வாழும் மொத்தம் 38 இலட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் தோற்றிய இவ்விரண்டு பரீட்சைகளதும் பெறுபேறுகள் இரண்டு மாதத்துக்குள் வெளிவந்துள்ளன.
குவைத் நாட்டில் உயர்தரம் விஞ்ஞான பிரிவில் (Bio Math ) கல்வி பயின்ற மாணவிகளான செல்வி.மெதுலி ரணசிங்க 96.6% புள்ளிகளையும், செல்வி.ஆபிதா ரியாஸ் 96% புள்ளிகளையும் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு தகைமை பெறுகிறார்கள். இதே போல் Computer Science, Bio Math, Bio Info ஆகிய விஞ்ஞானப் பிரிவுகளிலும், Commerce Math, Commerce Info, Commerce Entrepreneur ஆகிய வர்த்தகப் பிரிவுகளிலும், கலை பிரிவிலும் (Humanities) பல மாணவ மாணவிகள் கூடிய புள்ளிகளைப் பெற்று Engineering, Medicine, Accountancy ஆகிய பல்வேறு துறைகளிலும் பல்கலைக் கழகம் சென்று தமது உயர் கல்வியைத் தொடரத் தகுதி பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு திறமை காட்டி குவைத் வாழ் இலங்கையர்களுக்கும், தமது தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்திய உயர் தரப் பிரிவு 18 மாணவ மாணவிகளையும், சாதாரண தரப் பிரிவு 17 மாணவ மாணவிகளையும் கௌரவிக்குமுகமாக 10.06.2023 தினம் விஷேட நிகழ்ச்சி ஒன்றை இக்ரஃ இஸ்லாமிய சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கௌரவிப்பு நிகழ்வின் பிரதான அதிதியாக தலை சிறந்த பேச்சாளரும் (Motivational Speaker) , தொழிலதிபருமான அப்துல்லா ஹஸன் தாக்கூர் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர் Entrepreneurship
,Leadership, Self confidence உற்பட்ட இன்னும் பல்வேறு தலைப்புக்களில் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தி உள்ளார். எமது மாணவ மாணவிகளது உயர் கல்வி, அவர்களது எதிர்காலத்தை திட்டமிடுவது சம்பந்தமான வழி காட்டல்களை வழங்கி அவர்களை உற்சாகமூட்டி தைரியப் படுத்தினார். இது மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருந்தது.
அதே போல் குவைத், குர்த்துபா கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று திறமை சித்தி எய்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் விஷேட அதிதியாக IPC நிறுவனத்தின் ஜஹ்ரா கிளையின் முகாமையாளர் முஹம்மத் ஜமீல் அல்-ஷிம்மரீ அவர்கள் கலந்து சிறப்பித்தது மட்டுமல்லாமல் இந்நிகழ்வுக்கான மண்டபம் உட்பட்ட ஏனைய அனுசரணையையும் வழங்கி உதவினார்கள்.
இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், இக்ரா இஸ்லாமிய சங்க ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அங்கத்தவர்கள் உட்பட 100 க்கும் அதிகமானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இம்முறை மொத்தம் 1,660,511 மாணவ மாணவிகள் CBSE 12th( உயர்தரம்) பரீட்சைக்குத் தோற்றி அதில் 14 இலட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் சித்தி அடைந்துள்ளனர்.
அதே போல் மொத்தம் 2,165,805 மாணவ மாணவிகள் CBSE 10th (சாதாரண தரம்) பரீட்சைக்குத் தோற்றி அதில் 2,016,779 மாணவ மாணவிகள் சித்தி எய்துள்ளனர்.
இந்த மாணவச் செல்வங்கள் அனைவரையும் குவைத் வாழ் இலங்கை சமூகம் வாழ்த்தி மகிழ்வதுடன் அவர்களது கல்விப் பயணம் தொடரவும் வளமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்திக்கிறது.
Harees Salih
.jpeg)
.jpeg)
Post a Comment