Header Ads



அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 6 மாணவர்கள்


காலி, ஹபராதுவ, தல்பே கடலில் நீராடச் சென்ற 6 மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.


இச்சம்பவம் இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


அவர்களில் 5 மாணவர்களை பிரதேசவாசிகள் மற்றும் பொலிசார் காப்பாற்றியுள்ள நிலையல் ஒரு மாணவரை காணவில்லை.


நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் குருநாகல் பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.


குருநாகல் பகுதியில் மேலதிக வகுப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த மாணவர்கள் குழுவொன்று தல்பே கடற்கரையில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.