Header Ads



275 கடவுச்சீட்டுகளைச் தன்வசம் வைத்திருந்தவர் கைது


தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கண்டி, கெட்டம்பே தங்கொல்ல வீதியில் உள்ள வெளிநாட்டு ​வேலைவாய்ப்பு காரியாலயத்தை சுற்றிவளைத்த போதே, இந்த கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சுற்றிவளைப்பு தேடுதலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.


இந்த காரியாலயத்துக்கு, ஏனைய நாடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பிவைப்பதற்கான அனுமதி உள்ளது. எனினும், தென்​கொரியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான அனுமதி இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.  


ஷேன் செனவிரத்ன

No comments

Powered by Blogger.