Header Ads



சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் தமது வரலாற்றில், முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (வீடியோ)


EIMF  என்றழைக்கப்படும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும், சூரிச் - சிலீரன் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து நடாத்திய மாபெரும் உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடர் 03-12-2022 அன்று சிலீரன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.


19 பெரியவர்களுக்கான அணிகளும், 3 சிறுவர் அணிகளும் இந்த போட்டித்தொடரில் பங்கேற்றன. சுவிஸ் நாட்டின் பல்வேறு கண்டோன்களையும் சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன.


ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய, சிலீரன் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் நிர்வாகத் தலைவருமான அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் தலைமையில் பரிசளிப்பு விழா, இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.


நிகழ்வில் பிரதம அதீதியாக, மனித உரிமைகள் ஆர்வலரும், டிட்டிகோன் பிரதேச அரசியல்வாதியும் (SP) , அடுத்த வருடம் (2023) பாராளுமன்றத் தேர்தலில், வேட்பாளராக களமிறங்க உள்ளவருமான முஸ்தபா பங்கேற்றார்.


இறுதிப் போட்டியில் ஈமான் அணி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது, சிறுவர் அணியில் பொஸ்னா அணி வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது.


சுவிற்ஸர்லாந்தில் 35 வருடகால வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள், முதன்முறையாக இவ்வாறான ஒரு மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தமையும், அதில் சுவிஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 22 முஸ்லிம் அணிகள் பங்குபற்றியதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.


அத்துடன் உரிய நேரத்தில், ஜமாத்துடன் தொழுகை நடத்தப்பட்டதுடன், இலங்கை முஸ்லிம்களின் உணவு வகைகளில் சிறப்பானதாக கருதப்படும் புரியாணியும் விற்பனை செய்யப்பட்டது.


ஆண்கள், பெண்களுக்கு என பிரத்தியேகமாக பகுதிகள் ஓதுக்கப்பட்டிருந்ததுடன், இந்த உதைப்பந்தாட்ட  சுற்றுப் போட்டியின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம், சிலீரன்  மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலின் தேவைக்காக பயன்படுத்தப்படும் எனவும் ஏற்பாட்டாளர்களினால் அறிவிக்கப்பட்டது.





No comments

Powered by Blogger.