Header Ads



பிரபல கால்பந்து பயிற்றுவிப்பாளர், இறப்பதற்கு முன் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்


புருனோ மெஸ்ஸோ (அப்துல் கரீம்) என்பவர் பிரபல பிரெஞ்சு கால்பந்து பயிற்றுவிப்பாளர். 2002 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் செனகல் அணிக்கு பயிற்சியளித்து அதனை காலிறுதி வரை கொண்டு வந்தவர்.


பிறகு அவர் சுய விருப்பத்தோடு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு உறுதியுடன் இருந்தார். தனது பெயரை அப்துல் கரீம் என்று மாற்றிக் கொண்டார். செனகல் நாட்டு பெண் ஒருவரை மணந்து இரு குழந்தைகளும் உள்ளனர். தன் குடும்பம் மீதும் இஸ்லாமிய விவகாரங்கள் மீதும் அதீத பற்று கொண்டவராக இருந்தார்.


ஒருமுறை அவரை சந்திக்க வந்த ஒருவர் அவரை, திரு. மெஸ்ஸோ என்று அழைத்த போது: 'நான் (அப்துல் கரீம்) மகா தயாளனின் அடியான். நாமெல்லாம் அந்த தயாளனுக்கு நன்றி செலுத்தவதே படைக்கப்பட்டுள்ளோம், அவன் திருமுகத்தை காண்பதே நம் இலக்கு" என்றார்.


கடந்த 2013 ஆண்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தார். ஆபிரிக்காவை நேசித்த அவர் இறப்பதற்கு முன்னர், தன்னை செனகலில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னறிவிப்பு செய்திருந்தார். இறப்பதற்கு முன் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்: இஸ்லாம் ஒரு வரம். இஸ்லாம் அழியாது, நான் முஸ்லிமாக மரணிப்பதையிட்டு மிக மகிழ்ச்சியடைகிறேன்" என்பதாக இருந்தன.


தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.