ரணிலுக்கு எதிர்ப்பில்லை, என்கிறார் கிரியெல்ல
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எவரும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கவில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடையாது எனவும் அவர் திட்டவட்டமாக கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவினால் கொண்டு வரப்பட உள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை, கட்சியின் நிலைப்பாடு கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்த யோசனைக்கும் எவரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினைகளை கட்சிக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது எனவும், இந்தப் பிரச்சினைகளுக்கு வெளியில் சென்று தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
களவுப் பணிகளில் உச்சக்கட்டத்தை எட்டும் போது நன்மை தீமை,சரி,பிழை எதுவும் அந்த மூளைகளுக்கு விளங்கமாட்டாது.
ReplyDelete