Header Ads



'எதுவும் நிரந்தரமல்ல' என பேஸ்புக்கில் பதிவிட்டபின், தற்கொலை செய்த ஆசிரியை

'எதுவும் நிரந்தரமல்ல' என முகப்புத்தகத்தில் இடுகையொன்றை பதிவேற்றம் செய்து சில நிமிடங்களில் கழுத்தில் சுருக்கிட்டு பெண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் மாலபே கஹன்தொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மாலபே , கஹன்தொட பிரதேசத்தில் அமைந்துள்ள 2 மாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் தேசிய பாடசாலையொன்றின் ஆசிரியையாக பணி புருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நேற்று அதிகாலை அவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , தற்கொலை செய்துக்கொள்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இவர் பணிபுரிந்த தேசிய பாடசாலையில் இருந்து பதவி விலகியுள்ளார்.

தனது மகளுக்கு கல்வியை கடந்து வேறு உலகம் இல்லை என அவரது தாய் கூறியுள்ளார்.

தற்கொலை செய்துக்கொள்வதற்கு முந்தைய தினம் மகள் தன்னுடன் படுத்து உறங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் அதுருகிரிய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

3 comments:

  1. எல்லாத்துக்கும் தீர்வு இஸ்லாத்தில் இருக்கு.

    ReplyDelete
  2. Very sad news. Heartfelt condolence to the grieved kids and family. In the meantime, govt. must take initiatives to stop this kind of great sins.

    ReplyDelete
  3. உலக வாழ்க்கை என்பது ஒரு சோதனைக்கூடம் .இறைவனின் இந்த சோதனைகளில் வெற்றியடைபவர்கள் மரணத்தின் பின் நிரந்தர இன்பத்தில் வாழ முடியும் .ஆனால் தங்களை தாங்களே கொலை செய்து கொள்பவர்கள் இந்த வாழ்விலும் தோல்வியடைந்து மரணத்தின் பின் உள்ள வாழ்விலும் தோல்வியடைவார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.