புறா சண்டையில் ரிப்கான் கொலை - 6 பேர் நேற்று சரண்
(விடிவெள்ளி)
பொல்கஹவெல பகுதியில் புறா சண்டையில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் பொல்கஹவெல பொலிஸ் நிலையத்திற்கு சென்று நேற்றைய தினம் சரணடைந்துள்ளனர்
பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் தெல்கொல்லப் பகுதியில் புறா பிரச்சினையின் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமுற்ற 21 வயதுடைய எம். ஆர். எம். ரிப்கான் என்ற இளைஞர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார். .
காணாமல் போன புறாக்களை பெறும் பொருட்டு ரிப்கான் மற்றும் அவரது நண்பர்கள் தெல்கொல்ல என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற போது புறாவை அபகரித்திருந்த தரப்பினருக்கும் ரிப்கானின் நண்பர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாய் தர்க்கம் முற்றியதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ரிப்கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் கடும் காயமடைந்த அவர் பொல்கஹவெல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்கு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் நேற்றைய -05- தினம் பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு புறாவுக்கு போரா?????? பெரிய அக்கபோரக அல்லவா இருக்கிறது.
ReplyDeleteان الشيطان لكم عدو مبين
ReplyDelete