இஸ்ரேலை அங்கீகரித்த சவூதி, தூதுவரும் நியமனம், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூஸலத்தில் தூதரகம் திறப்பு
-லத்தீப் பாரூக்-
சவூதி அரேபியா தலைமையிலான மத்திய கிழக்கின்; எல்லா அரசுகளும் இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைக் கொண்டுள்ளன. தற்போது சவூதி அரோபியா ஒரு படி வெளிப்படையாக முன்னேறி இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர உறவுகளைத் தொடங்கியுள்ளது.
படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு. ஏமாற்று வேலைகள், அநீதியான செயற்பாடுகள் மற்றும் இதர வன்முறைகள் மூலம் பலஸ்தீனர்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட பூமியில் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படைகளை முற்று முழுதாக மீறும் வகையில் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாகச் சேர்ந்து செய்த சதியின் விளைவாகத் தான் இது சாத்தியமாயிற்று. மத்திய கிழக்கு நாடுகளின் வளங்களை சூறையாடி, அமைதியை குலைத்து அந்த மக்களை கொன்று குவிக்கும் நோக்கில் அந்தப் பிராந்தியத்துக்குள் உருவாக்கப்பட்டதுதான் இஸ்ரேல். கடந்த பல தசாப்தங்களாக இந்தப் பணி அங்கு செவ்வனே நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
பழங்குடி இனவாத சவூதி அரசு உலகில் முஸ்லிம் நாடுகளுக்கு ஒரு முகத்தையும் கிறிஸ்தவ உலகுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி வருகின்றது. இந்த அரசு ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூஸலம் நகரில் தற்போது தூதுவர்களின் தங்குமிடம் என்ற போர்வையில் தூதரகம் ஒன்றைத் திறந்துள்ளது. மக்கா மதீனா ஆகிய இரண்டு புனித ஸ்தலங்களி;னதும் காவலர் என தன்னை அழைத்துக் கொள்ளும் சவூதி அரேபியாவின் உரிமையாளரான மன்னர் சல்மான் தனக்கு மிகவும் விசுவாசமான, அமெரிக்கர்களை விட அமெரிக்காவுக்கு ஆதரவான, யூதர்களை விட இஸ்ரேலுக்கு ஆதரவான அல் வலீத் பின் தலால் என்பவரை இஸ்ரேலுக்கான சவூதியின் முதலாவது தூதுவராக நியமித்துள்ளார். இந்த வலீத் என்பவர் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் செல்வங்களை சூறையாடி அவற்றை அழித்து வரும்; கூட்டாண்மை நிறுவனங்களோடு மிகவும் பரிச்சயமானவர். இஸ்ரேலுக்கான முதலாவது கௌரவ தூதுவராக தான் பொறுப்பேற்றுள்ளமை தனக்கு பெருமை அளிக்கின்றது என்றும் ஈரானின் நிகழ்ச்சி நிரலை முறியடிக்க இஸ்ரேலுடன் கைகோர்த்து பணி புரிய தான் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் இஸ்ரேலில் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இவர் கூறியுள்ள வேலைத்திட்டம் உண்மையிலேயே இஸ்ரேலின் வேலைத்திட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் சியோனிஸ அரசு இதுவரை அப்பாவி பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்ட 60க்கும் மேற்பட்ட பாரிய படுகொலைச் சம்பவங்களுக்கு பொறுப்பாக இருந்துள்ளது. இன்னமும் முஸ்லிம்களின் மூன்றாவது புனித பூமியான மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமித்து அட்டகாசம் புரிந்து வருகின்றது. அத்தகைய ஒரு அரசோடு கைகோர்த்து செயற்படுவதை தனக்கு கிடைத்த பாக்கியமாகவும் பெருமையாகவும் கருதுகின்றார் சவூதி தூதுவர் வலீத் பின் தலால். ஒரு வேளை அல் அக்ஸாவைப் பற்றி இவருக்கு எதுவும் தெரியாமல் கூட இருக்கலாம். அல்வலீத் யூதர்களுக்கு சொந்தமான அமெரிக்க ஊடகங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளவர். இந்த ஊடகங்கள் தான் இஸ்லாத்துக்கு எதிராக நாளாந்தம் விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருபவை. முஸ்லிம் நாடுகள் அழிக்கப்படுவதையும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் மறைமுகமாக நியாயப்படுத்தி வருபவையும் இதே ஊடகங்கள் தான்.
'இந்த அழகிய நாட்டுக்கு சவூதி அரேபியாவின் முதலாவது தூதுவராக வருவதையிட்டு நான் உண்மையிலேயே பெருமை அடைகின்றேன். உலகில் மிகவும் கொந்தளிப்பான ஒரு பகுதியில் காணப்படும் இஸ்ரேல் ஒரு ஸ்திரமான தீவு. அதி உன்னதமான ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் இஸ்ரேலின் முன்னோர்கள் இந்த நாட்டை கட்டி எழுப்பி உள்ளனர்' இஸ்ரேலைப் பற்றி சவூதி தூதுவர் உதிர்த்துள்ள முத்துக்கள் இவை. குற்றப் பின்னணி கொண்ட இஸ்ரேலின் வரலாறு பற்றிய தலாலின் அறிவீனத்தையே இது புலப்படுத்துகின்றது. பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொடுமைகள் பற்றி ஒரு வார்த்தையேனும் அவர் கூறவில்லை.
சவூதியின் தினசரி பத்திரிகையான அல்ஒகாஸ் 2016 ஏப்பிரல் 16 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின் படி வலீத் பின் தலாலுக்கு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். இஸ்ரேலுக்கான முதலாவது கௌரவ தூதுவர் என்ற வகையில் இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
ஜெரூஸலத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு மிக அருகில் இலக்கம் 14 டேவிட் பிளஸர் சென்ட் என்ற முகவரியில் சவூதி அரேபியா ஆடம்பரமான மூன்று மாடி கட்டிடம் ஒன்றை தனது தூதரக தேவைக்காக கொள்வனவு செய்துள்ளது. கடந்த வாரம் உத்தியோகப்பூர்வ விருந்து வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்து தனது பணிகளை தலால் அங்கு தொடங்கியுள்ளார். இந்த விருந்தில் இஸ்ரேல் ஜனாதிபதி மற்றும்; பிரதமர் நெட்டன்யாஹு உட்பட நெஸட் (நாடாளுமன்றம்) உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இது மட்டும் அல்ல இந்த வைபவத்தில் தூதுவர் தலால் ஒரு முக்கிய அறிவிப்பையும் விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் நேரடி யுத்தம் ஒன்று மூண்டால் அதில் சவூதி அரேபியா நிச்சயம் இஸ்ரேலின் பக்கம் தான் இருக்குமே தவிர பலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிக்காது என்பதுதான் அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அறிவிப்பாகும். எவ்வாறேனும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மற்றும் முழு மனித குலத்துக்கும் அவமானமாகத் திகழும் இந்த வெற்கம் கெட்ட தலால் மனித குலத்தின் அடிப்படை உரிமைகளை கூட புரிந்து கொள்ளத் தவறியுள்ளவர் என்பதை தான் இது தெளிவு படுத்துகின்றது. பலஸ்தீன மக்களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான இஸ்ரேலின் குற்றங்களில் பங்கேற்பது சவூதி அரேபியாவுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல.
உதாரணத்துக்கு சவூதி இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் துரோகத்தனம் மிக்க பலஸ்தீன அதிகார சபையின் அதிகாரிகளோடு இணைந்து ஜோர்தானில் மேற்கொண்ட இரகசிய சந்திப்பு திட்டமிடல் என்பனவற்றின் மூலம் தான் 2014ல் காஸா மீதான மூர்க்கத்தனமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதல் அதன் பின்னரும் பல தடவைகள் தொடரப்பட்டன. சியோனிஸ அரசின் பாஸிஸ இயல்புகளையும் சவூதி அரேபிய சர்வாதிகாரிகளின் துரோகத் தனத்தையும் பறை சாற்றுவதாக இந்தத் தாக்குதல்கள் அமைந்திருந்தன. இஸ்லாத்துக்கு முற்றிலும் விரோதமான இஸ்லாமிய விழுமியங்கள் அற்ற தமது காலம் கடந்த பழங்குடி அரசையும் அதில் அவர்கள் வகிக்கும் பதவிகளையும், அதிகாரத்தையும் நிலை நிறுத்திக் கொள்ளவும் அப்பாவி மக்களிடம் இருந்து கொள்ளையடித்து சியோனிஸ வங்கிகளிலும் ஏனைய மேலைத்தேச முதலீட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ள தமது செல்வங்களை தக்கவைத்துக் கொள்ளவும் பேய்களுடன் கூட படுத்துறங்க தயங்காதவர்கள் தான் இந்தக் கொடியவர்கள்.
தூதுவர் வலீத் தன்னை ஒரு முஸ்லிம் என்றும் அழைத்துக் கொள்கிறார். ஆனால் முஸ்லிம்களின் மூன்றாவது புனித பிரதேசமான மஸ்ஜிதுல் அக்ஸா பற்றிய சியோனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு பற்றி புரிந்து கொள்ள அவர் தவறியுள்ளார்.
இவ்வாறானதோர் பின்னணியில் தான் வளைகுடாவின் ஏனைய ஷேக்மாரும் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். 1930 கள் முதல் அன்றாடம் கொடுமை இழைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வரும் பலஸ்தீன மக்களுக்காக கொஞ்சம் கூட கவலை படாத நிலையில் தான் இவர்கள் எல்லோரும் இப்போது இஸ்ரேலின் அங்கீகாரத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். பலஸ்தீன மக்களிடம் இருந்து சட்ட விரோதமாகப் பறிக்கப்பட்ட காணிகளில், அதுவரை பலஸ்தீன பூமியைக் கண்டிராத ஒரு கூட்டத்துக்காக தனியான யூத குடியேற்றங்களை நிறுவி உருவாக்கப்பட்டதுதான் இஸ்ரேல் என்பதை இவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.
மனித குலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா சட்டவிதிகளையும் மீறி, மனித குலத்துக்கான எல்லாவிதமான விழுமியங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தையும் கடந்து இஸ்ரேலின் பாதுகாவலர்களான அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பா மற்றும் ரஷ்யா என்பனவற்றின் அனுசரனையுடன் பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றச் செயல்களின் பட்டியல் இன்னமும் தொடருகின்றது.
கத்தார் ஏற்கனவே இஸ்ரேலை அங்கீகரித்துள்ளது. பலஸ்தீன இரத்தத்தில் தோய்ந்த கரங்களைக் கொண்ட இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரஸை அது வரவேற்றுள்ளது. ஒமானின் சர்வாதிகாரி சுல்தான் கபூஸுக்கும் இது வழமையாகிவிட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்திலும் இஸ்ரேல் இன்று ஒரு மறைமுக சக்தியாகத் திகழ்கின்றது. வளைகுடாவின் இன்றைய வெற்கக் கேடான நிலை இதுதான்.
இஸ்ரேலை அங்கீகீகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள நாடுகள் வரிசையில் கடைசியாக இடம் பிடித்துள்ள நாடாக குவைத் மாறியுள்ளது.
இந்த மத்திய கிழக்கு நாடுகள் அணைத்திலும் காணப்படுவது காலம் கடந்த வரலாற்றின் மத்திய காலத்துக்கு சொந்தமான பழங்குடி இனத் தலைமைகள் தான். உலகில் இன்னமும் எஞ்சியுள்ள மிக மோசமான அடக்குமுறை போக்கு கொண்ட சர்வாதிகாரிகளாகவும் இவர்களே காணப்படுகின்றனர். அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலை அங்கீகரிக்குமாறு இந்த நாடுகள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. இவ்விரண்டு நாடுகளிலும் யூத செல்வாக்கின் கீழ்தான் ஆட்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்த நெருக்குதல்களுக்கு வளைகுடா ஷேக்மார் அடி பணிந்தே தீரவேண்டும் என்பது நிர்ப்பந்தம். காரணம் இவர்கள் தத்தமது நாடுகளில் மக்களைச் சுரண்டி சேமித்த சொத்துக்கள் இந்த நாடுகளில் தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. தமது மக்களை அடக்கி ஒடுக்கி சம்பாதித்த இந்த சொத்துக்களில் தான் இவர்களின் எதிர்காலமே தங்கியுள்ளது.
இந்த ஷேக்மாரின் பிரதான சொத்து அந்த நாடுகளின் எண்ணெய் வளம். இது இறைவன் வழங்கிய அருட்கொடையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஆனால் அவர்கள் அந்த இறைவனை மறந்து விட்டனர். அவர்கள் இருந்த நிலையை, அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து கடைசியில் மார்க்கத்தையும் மறந்து இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யுத்த வெறியர்களோடு கைகோர்த்துள்ளனர். முஸ்லிம் நாடுகளில் மேற்கொள்ளப்படும் யூத கிறிஸ்தவ யுத்தங்களுக்காக இவர்கள் தமது செல்வத்தை செலவிடுகின்றனர். முஸ்லிம் நாடுகளில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மரணத்தையும் அழிவையும் இன்னும் சொல்லொணா துன்பங்களையும் எதிர்நோக்க இவர்கள் வழி வகுக்கின்றனர்.
தமக்கு புதிதாகக் கிடைத்த செல்வத்தின் காரணமாக இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய படைகளையும் எதிரிகளாக நோக்கும் கீழ் தரமான நிலைக்கு சென்று விட்டனர். இஸ்லாமிய அரசுகளை அழித்தொழிக்க மேற்குலக யுத்த வெறியர்களோடு கூட்டு சேர்ந்துள்ளனர். ஏகிப்தில் மக்களால் ஜனநாயக ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்லாமிய போக்கு அரசை கவிழ்க்க சவூதி ஐந்து பில்லியன் டொலர்களையும், குவைத்தும் ஐக்கிய அரபு இராச்சியமும் தலா மூன்று பில்லியன் டொலர்கள் என மொத்தம் 11 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. இன்னொரு முனையில் ஹமாஸ் இயக்கத்தை அழிக்க இஸ்ரேலுக்கு அதரவும் அளித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தான் குவைத் ஊடகவியலாளர் யூஸீப் அப்த் அல் கரீம் அல் சின்கவி சகல அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலை அங்கிகரிக்க வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இஸ்ரேலை சியோனிஸ பிரிவு என அழைக்க வேண்டாம் எனவும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த சொற் பிரயோகங்கள் இஸ்ரேலின் சட்டபூர்வ தன்மையை குறைத்து மதிப்பிடுவதாக அமையும் என்பதே அவரின் கருத்தாக உள்ளது.
ஊடகவியலாளர் என தன்னை அழைத்துக் கொள்ளும் இவர் பெரும்பாலும் அந்த நாட்டு அரசின் கைக்கூலியாக இருக்க வேண்டும். இவரும் இஸ்ரேலின் பின்னணி பற்றியோ, அதன் அமெரிக்க ஐரோப்பிய எஜமானர்களின் இஸ்லாத்துக்கு எதிரான யுத்தப் போக்கு பற்றியோ எதுவும் அறியாதவராக இருக்க வேண்டும். இந்த யுத்தங்கள் காரணமாக பல முஸ்லிம் நாடுகள் அழிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் இன்னும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் நிர்க்கதி நிலைக்கும் தள்ளப்பட்டு வாழ வழியின்றி அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளமையை இவர் அறிந்திருக்க மாட்டார்.
வளைகுடா நாடுகள் பல மக்களின் எதிர்ப்புக்கு அளாகியுள்ளன. அனாலும் பாவம் மக்கள் அவர்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது. ஓன்றில் அவர்கள் எதிர்த்துப் பேசி எஞ்சிய காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் அல்லது கண்டும் காணாமல் குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஊமைகளாகவும் இருக்க வேண்டும். இதில் இரண்டாவது நிலையைத் தான் பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மக்கள் இப்படியே இருப்பார்கள். ஒருவேளை இன்றைய நிலை சவூதி மற்றும் பழங்குடி அரசுகளின் முடிவுக்கான ஆரம்பமாகவும் கூட அமையலாம்.

இது, சவூதியின் வர்க்க சார்பு தெரிந்திராதவர்களுக்கு மட்டுமே ஆச்சரியமான செய்தி.
ReplyDeleteஉலகிலுள்ள அனைத்து மனித நிர்வாகக்கட்டமைப்புகளும் ஒன்றில்...
1.ஆளும் (அடக்குமுறை) வர்க்கம்
2.ஒடுக்கப்படும் வர்க்கம்
ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றிற்கு ஆதரவாக இருந்தே வருகின்றன. சவூதியின் ஆளும் அரசு அமெரிக்கா உட்பட உலகின் சகல நாடுகளிலுமுள்ள ஆளும் அடக்குமுறை வர்க்கத்திற்கு ஆதரவாகத்தான் செயற்பட்டு வருகின்றது. அவர்களே நினைத்தாலும் அதிலிருந்து விடுபட முடியாதளவு வர்க்க பேதம் ஆழமாக உள்ளது.
பாலஸ்தீனிய மக்களும் அவர்களது போராட்டமும் ஒடுக்கப்படும் மக்களின் வர்க்கத்திற்குரியது. ஓடுக்குமுறைக்கு ஆதரவாக இன்னுமொரு ஒடுக்கப்படும் மக்களும் அவர்களைப் பிரதிநிதத்துவப் படுத்தும் கட்டமைப்புகளும் மட்டுமே இருக்கும்.
இதிலே இருவரும் இஸ்லாமியர்கள் என்பதனால் சவூதி அரசு பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று யாராவது நம்பிக்கொண்டிருந்தால் அவர்களைப்போன்ற அப்பாவிகள் வேறுயாருமிருக்க முடியாது. வர்க்க நலன்களுக்கு முன்பு ஆன்மீக உணர்வுகளெல்லாம் வெறும் செல்லாக்காசுகளே!
யூதர்களின் அடிவருடிகலான இவர்களை பற்றி குறை கூறும் எல்லோரையும் ஷீயாக்கள் என்று கூறி இங்கே குறிப்பு இடும் மூடர்கலின் பதில் என்ன? அமெரிக்காவின் பொருளாதார பலம் பாதுகாக்கப் படுவதும் இந்த சௌதி மற்றும் சில அரபு நாடுகளின் நயவஞ்ஞக செயல்கலினால். அராபியர்கள் தங்கள் எண்ணையை தன் சொந்த செலாவணியில் விற்காமல் ஏன் அமெரிக்க டொலர்கலில் உலகுக்கு விற்கின்றது? அவர்கள் எண்ணையை ரியாலிலோ டினாரிலோ விற்றால் அமேரிக்கா பொருளாதாரம் முற்றாக சரிந்து விடும். அரபு நாடுகளில் உள்ள ஏலை மக்களின் துன்பங்கள் குறையும். முன்னாள் மஎலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மத் சொன்ன கருத்து- ஆரபியர்கலிடம் உள்ள எண்ணை வலம் எம்மிடம் இருந்தால் நாம் இந்த உலகையே ஆட்சி செய்வோம். சௌதியின் அரசு பற்றி தெளிவான விளக்கம் இல்லாமல் இங்கு அவர்களின் புகல் பாட காத்து இருக்கும் அரிவீனர்கள் போன்ற பலர் முலு உலகிலும் உள்ளனர் என்பது ஒரு கசப்பான உண்மை.
ReplyDeletefor wahbasis and agents of Saudi. this is not a bida .. this is not munkar.. politics of Saudi is not problems for them
ReplyDeleteOur Wahhabis are always ready to defend Saudi position in any issue for the oil money they get from them .
ReplyDeleteCan the writer provide authentic document for the NEW office that you claim KSA is opening in ISRAEL ?
ReplyDeleteஇங்கு உள்ள பிரபல JP மற்றும் ஏனைய சவூதி ஆதரவு வல்லுனர்களின் மறுப்பு கருத்துகளும் கட்டுரையும் எப்போது வரும்?
ReplyDeleteMr. Latheef Farook's articles on Saudi are always very critical and for me it looks biased and one sided. I am not a liker of Monarch in KSA.
ReplyDelete"ஜப்னா முஸ்லிம்" என்ற இணையத்தளம், ஷீயாக்களின் ஆதிக்கத்தில் இருப்பதுபோல் தெரிகின்றது . அது சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஒரு பொய்யான தகவலை "ஷீயா மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர்" ஊடாக பரப்பியுள்ளது .
ReplyDeleteNobody should wonder if the Israelis open their office
ReplyDeletein Mecca and consul in Medina . No need to blame Saudi.
Blame Saudi boot lickers operating in our country under
different names fooling the local innocent folks . Some
stupid religious fellows even try to be more than Arabs
in following Islam . Saudi is stuck with more than 700
billion dollars investment securities in the USA. Well,
do we know that "jannathul baki" had annexed part of a
Jewish cemetery ? Jews had been happily living all over
Arabia with Arabs side by side . Don't burn your oxygen
too much worrying about Israel . It is just a matter of
curtain raising .The news yesterday was " Al Aqsa" was
declared by UNESCO as belonging to Arabs and the news
today is ,Saudi recognizes Israel ! Understand the deal?
It is all about deals ? Don't blame anyone , just find
fault with yourself for being an idiot all along about
BLINDLY BELIEVING AND FOLLOWING MANYTHINGS . My challenge
now to those who claim the whole world is embracing Islam
is, open your eyes and see that ISLAMIC WORLD IS
EMBRACING MORE AND MORE OF SCIENCE THAN HISTORY OF RELIGIONS.SLOWLY BUT STEADILY . FASTEN YOUR SEAT BELTS,
MORE NEWS WILL FOLLOW . I AM HAPPY ABOUT ONE THING, I
DID MY PART TO EXPLAIN MY VIEW ON WORLD SITUATION ABOUT
BLIND FOLLOWING OF ANYTHING , THROUGH THIS FORUM . SO NO
SURPRISE FOR ME .
This Author have been known for Igwani methdology. He is always anti Saudi. May allaah give what he deserve. This is utter lie. How many news we found , it look like hot but utter lie. I have adviced him several time personally.
ReplyDeleteThis Author have been known for Igwani methdology. He is always anti Saudi. May allaah give what he deserve. This is utter lie. How many news we found , it look like hot but utter lie. I have adviced him several time personally.
ReplyDeleteThere are enough pictures in the Web sites about Embassy opening and the function held for that perpose.
ReplyDeleteயெமனிய யுத்தத்திற்குப் பிறகு சஊதி அரேபியா பற்றித் தவறான செய்திகளைப் பரப்புவதில் தீவிரம் காட்டும் ஜஃப்னா முஸ்லிம் ஏன் முஸ்லிம்களுக்கு எதிரான ஈரானின் இத்தகைய செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. Greeted by the Iranian and Israeli flags, a large crowd gathered on Monday for the opening of the Iranian “Embassy” in Jerusalem. The event did not signal a sudden and unexpected rapprochement between the two countries, but is the brainchild of a group of Israeli artists, some with Persian roots, who seek to highlight Iranian culture and its many links with the Jewish state.
ReplyDeleteread more: http://www.haaretz.com/israel-news/.premium-1.693274
May Allah Bless KSA in its effort to unit all Sunni Muslim world.
ReplyDeleteSHIA influence in side Srilankan Muslims especially people in media are becoming crystal clear.
DEALING with JEWs ? THEY fight you how come possible ?
JEWS fought with Muhammed (sal) especilly Kaifar war. BUT At the death time of Muhammed (sal), where did he keep his weapon (shield) to get some flour for his food, while many wealthy sahaaba were present around him.
IS DEALING WITH JEWS, who fought and fight with you a subject of HARAAM ? if so What about the SUNNAH of Muhammed (sal) at his death time?
ISLAM Do not mix religion with Worldly affairs.. That is evident from the incident of Muhammed (sal).
But OUR heart feeling against ISREAL to capture KUDS is an issue of religion so we have to work for.
May Allah Bless and GUIDE King salamaan for the sake of TAWHEED.
Protect our brohters and sisters form GRAVE worshippers who claim most of SAHAABA (Abubaker, Umar, Uthmaan, Aesha ) to be Kafir (Asthahfirullah)
This Latheef Farooq...Sutta Mokkan..... He doesnt know any base concept of any thing....he is half made by Shiya...or Anti-Saudi Governement.
ReplyDeleteIs there any words in Quaran...Saudi is the ISLAM..?
Is there any words in Quraan... Palastine is teh ISLAM..?
Is there any words in Quran....LATHEEF FAROOQ is known everything....?
Aday these are all political...do not match anything or anyperson with true Islam....Islam never by muslim names or muslim names countries..mind it..
MR. REACTION.ஒரு மனிதன் மோசமானவனாக இருந்தாலும் அவன் உண்மை சொன்னால் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதேபோல் அவன் மனிதன் தவறு செய்வான் அதற்காக அவன் செய்த உண்மை பொய்யாகாது.யாரும் சவுதிக்கோ அல்லது சவுதியில் உள்ள தவறு செய்யும் மக்களுக்கோ ஆதரவு கொடுக்க வில்லை.ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தலை வலிக்கு பண்டோல் நல்லது என்று வைத்தியர் பரிந்துரைக்கிறார் உட்கொள்கிறோம் தலை வலி போய்விட்டது.அதே வைத்தியார் வைத்தியம் பார்க்க வந்த இளம் பெண்ணை கற்பழித்தார் ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது அதேவேளை அவர் பனடோல் தலை வலிக்கு நல்லம் என்றது பொய்யாகுமா? யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தப்புத்தான் அதற்காக வானத்துக்கும் பூமிக்குமிடையில் குதித்து நாம் கொண்டிருக்கும் மோடக்கொள்கையை இச்சந்தர்ப்பத்தில் நியாயப்படுத்தலாம் என்று எதிர் பார்ப்பது முட்டாளின் முதிர்வுக்கட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்.
ReplyDeleteI had a suspicion when the Sri Lanka Muslim Counsel, which the author was also a member was created backed by Iran (Shia) also Ihwan and Jamathe islami.
ReplyDeleteI had a some respect about this author earlier. but now he proves who is he working for.
I greatly appreciate the knowledge of Br.Rilwan Thahire who have come out with wonderful invention
ReplyDeleteதிரு Mustafa அவர்களே, இந்த கட்டுரையில் உள்ள விடயத்தை விடுத்து சம்பந்தம் இல்லா விடயஙகளை எலுதி சவூதியின் பிலைகலை மரைக்க முயற்சிக்க வேண்டாம். சீயாக்கள் தவறு செய்கிரார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த தவருகளைக் காட்டி சவூதியின் பெரும் தவருகளை சரி என விவாதிப்பது பெரும் முட்டாள் தனம்.
ReplyDeleteஇலங்கையில் இஸ்ரேலிய தூதுவரகம் திறக்க இனி என்ன தடை!
ReplyDeleteNothing to be surprise
ReplyDeleteReaction நான் சவுதியை சவுதி மக்களை அல்லது சவுதி அரசை நேசிக்கவில்லை நா இஸ்லாத்தை நேசிக்கிறேன் அதனால் நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவோ யாருடையவும் குறைகளை மறைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை
ReplyDeleteகட்டுரையாளர் தனது கருத்துக்களை சவூதி அரேபியாவிலிருந்து வெளிவரும் #உக்காள் தினசரிப்பத்திரிகையை மேற்கோள் காட்டியே எழுதியுள்ளார். ஆனால் அவர் எடுத்தாண்ட மேற்படி இதழில் குறித்த விவகாரம் தொடர்பில் ஒரு செய்தியேனும் காணக்கிடைக்கவில்லை. எனவே தனது கட்டுரை தொடர்பில் குறித்த எழுத்தாளர் தன்னிலை விளக்கம் தரும் வரை மேற்படி செய்தியானது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகவே கருதப்படும். அதே நேரம் மேற்படி செய்தியானது வதந்தியான செய்தி என அமீர் தலாலின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ReplyDeleteசவூதியின் மீது கொண்ட காழ்ப்புணர்வும் வெறுப்பும் காரணமாக இப்படியான ஊர்ஜிதப்படுத்தாத சர்வதேச செய்தி ஸ்தாபனங்களின் செய்திகளை நகல் பன்னி அணுப்பிரமாணம் பிசுகாமல் சவூதி அரேபியாவின் வெளிநாட்டு இராஜதந்திர உறவுகள் குறித்த ஜோடிக்கப்பட்ட மேற்படி செய்தியை பிரசுரித்த எழுத்தாளரும் ஊடகங்களும் எந்த சக்திகளின் ஊதுகுலலாக இயங்குகின்றன என்று நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. எனவேதான் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவ்வாறான ஊடக வலையமைப்புக்கள் ஊடக ஒழுக்கத்தை கடைபிடித்து நல்குமாறு வினையமாக கேட்டுக்கொள்கிறோம்.
இக்குறித்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள எமக்கு உதவிய சவூதி அரேபியா நஜ்ரான் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அஷரப்(Ahmed Ashraff) அவர்களுக்கு நன்றிகள்
JEDDAH: The Kingdom has called on the Security Council to set Israel a time frame to abide by international agreements to withdraw from occupied Palestinian territory, stop building settlements and erecting apartheid-style walls.
ReplyDeleteAbdallah Al-Mouallimi, ambassador of the Kingdom at the United Nations, made this appeal at a meeting of the Security Council on Tuesday night. He said Israel was defying the international community by working to Judaize Al-Quds and historic Islamic and Christian sites, and changing Al-Aqsa Mosque.
Al-Mouallimi also thanked the Security Council for its condemnation of Iran for the “barbaric assault” on the Saudi Embassy in Tehran and the country’s Consulate General in Mashhad city.
On the Syrian crisis, Al-Mouallimi said the Security Council has not been able over the past five years to perform its duty to protect the Syrian people from the “acts of murder, intimidation, starvation and genocide being committed by the Syrian authorities.”
He said this has resulted in the killing of more than 300,000 people and the displacement of over 12 million, in addition to the destruction of the country and creation of terrorist groups that were threatening the whole world.
“We affirm the condemnation of all types of blockades imposed around several Syrian cities and villages and the use of starvation as a tool of war by all parties.”
He said there are 49 out of 52 cities under siege by the Syrian authorities with the aid of Hezbollah and other terrorist groups.
“The only way to solve this humanitarian catastrophe is through a political solution ... We will also continue our work through the International Support Group on Syria to ensure the political transition process based on the Vienna and Geneva statements,” he said.