Header Ads



மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஸவின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஆதரவாளர்களை அழைத்துச் செல்ல, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறு பஸ்கள் பயன்படுத்தப்பட்டமைக்காக ஒரு கோடியே நாற்பது லட்ச ரூபா செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கான பணத்தை செலுத்த தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை எதிர்வரும் 11ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்ற நீதவான் சிரானி குணரட்ன உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தினத்தில் முறைப்பாட்டை செய்யுமாறு நீதவான், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பஸ்களுக்கு இன்னமும் கட்டணம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா, முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் ஆகியோரும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இது எல்லாம் சும்மா கண்துடைப்புக்காகவேண்டி செய்யப் படும் வழக்குகள்...இ.போ. ச. வரவு செலவு கணக்கில் தப்பு இருக்கிறது என்று சொல்லி வழக்கை அப்பாவிகளின் மேல் திருப்பி விடுவார்கள். summmmmmmmmaaaaaaaaaaa

    ReplyDelete

Powered by Blogger.