Header Ads



றிசாத் பதியுதீன் நினைத்தபடி, விலை நிர்ணயிக்க முடியாது - நு.அ.ச. தலைவர் ராஜினாமா..?

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் பதவி விலகக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவராக கலாநிதி ஆர்.எம்.கே. ரட்நாயக்க கடமையாற்றி வருகின்றார்.

தமக்கு அறிவிக்காமல் அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ரட்நாயக்க ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவரான தமக்கு எவ்வித அறிவிப்பினையும் வழங்காது அமைச்சர் ரிசாட்டும் சில அதிகாரிகளும் சில பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளதுடன், சில பொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது என ரட்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் மற்றும் விலை அதிகரிப்பு என்பன குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கே வழங்கியுள்ளது.

நிறுவனமொன்றின் அனுமதியின்றி நினைத்தவாறு தீர்மானங்களை எடுக்க நிறுவனங்களுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானித்ததாகவும் ரட்நாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து அமைச்சர் பதியுதீன் தரப்பில் எவ்வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ரட்நாயக்க அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படும் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளாரா என்பதனை கைத்தொழில் வர்த்தக அமைச்சோ அல்லது அரசாங்கத்தின் தரப்புக்களோ உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஹஸித திலகரத்ன இவ்வாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையின் முன்னாள் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

Powered by Blogger.