Header Ads



"இஸ்லாமிய விழுமியங்களை நடைமுறைப்படுத்துவதில், முஸ்லிம் அல்லாத நாடுகள் முன்னணி"

-Azeem Salam-

"இஸ்லாமிய மதிப்பீடுகளையும் அதன் விழுமியங்களையும் அதன் சர்வதேச ஒழுக்கங்களையும் வாழவைக்கின்ரோம் நடைமுறைப்படுத்துகின்ரோம் என்று தம்பட்டம் அடிக்கின்ற எந்த நாடும் அதனைச் செயற்பாட்டளவில் செய்யவில்லை" என்று சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க ஜொர்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் அமைப்பொன்று மேற்கொண்ட ஆய்வொன்று கூறுகின்றது.
.
208 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வின் தலைப்பு ''இஸ்லாமிய நாடுகள் உண்மையில் இஸ்லாமியத்தினை கொண்டிருக்கின்றனவா" ? என்பதாக இருந்தது. குறிப்பாக இஸ்லாத்தை தமது தேசிய மதமாக பிரகடனம் செய்துள்ள நாடுகளும் செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகலே அதனை அமுல் செய்வதில் மிகவும் மெத்தனப் போக்கைக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகியுள்ளது. 
.
மாற்றமாக, இஸ்லாமிய இஸ்லாமிய மதிப்பீடுகளையும் அதன் விழுமியங்கனளயும் நடைமுறைப்படுத்துவதில் முஸ்லிம் அல்லாத நாடுகள் முன்னணி வகிக்கிறன. நியூசிலாந்து முதல் இடத்திலும் லக்சம்பேர்க் இரண்டாவது இடத்திலும் அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் வரும் அதே வேளையில் ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியன அடுத்த இடங்கனளப் பிடித்துள்ளன.
.
முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமியம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பெரும் மலேசியா மொத்தப் பட்டியலில் 33- வது இடத்தில் இருக்கின்றது; குவைத் 48-வது இடத்திலும் பஹ்ரைன் 64-வது இடத்திலும் அமீரகம் 66-வது இடத்திலும் இருக்கின்றன.வட ஆபிரிக்காவில் டியூனிஷியா முன்னணி வகிக்கிறது. அது 83-வது இடத்தை பிடித்திருப்பதுடன் லிபியா 195-வது இடத்தில் இருக்கின்றது. மற்றும் மொரொக்கோ 119, சவுதி 131, அல்ஜீரியா 160, ஈரான் 163, மொரிடானியா 195 ஆகிய இடங்களை பிடித்த்திருக்கின்றன.
.
இஸ்லாம் எதிர்பார்க்கும் பொருளாதார, சமூக, அரசியல், நீதித்துறை என்பனவற்றில் உள்ள அபிவிருத்தி மற்றும் வெளிப்படைத் தன்மை பொறுப்புக் கூறல் என்பன முக்கியமாக அவதானிக்கப்பட்டன. அத்தோடு மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், கல்வியில் ஆண் பெண் சமத்துவம், மனிதனுடைய கன்னியத்தைப் பாதுகாத்தல், ஒத்துழைப்பு, நீதி, லஞ்சம், ஊழல் என்பனவும் முக்கியமான அம்சங்களாக அவதானிக்கப்பட்டன.
.
#www.hespress.com/Societe
‪#‎மகாஷித்‬ அஷ் ஷரீஆ
‪#‎World‬ Corruption Index

2 comments:

  1. Done by whom.....? Do they really practicing Muslims... ? Do they know What is Islam in reality ? or They have their own understanding toward Islam other than what was practiced by SALAF us Saleheens?

    A research result can very based who involved in it.

    ReplyDelete
  2. I have no idea how he got the statistics. As far as I know around 195 countries arround the world.

    ReplyDelete

Powered by Blogger.