Header Ads



ஏறாவூரை அச்சுறுத்தும் ஜெலி

ஏறாவூர் சவுக்கடி கடலில் உடலில் எரிவூட்டக்கூடிய ஜெலி மீன்கள் கடந்த சில நாட்களாக கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவை இழுவை வலைகளில் சிக்கி வலை இழுக்கும் மீனவர்களின் உடலில் படும்போது காயம் ஏற்படுவதுடன் எரிவு உண்டாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மீன்களின் உணர்கொம்புகள் நூல் வடிவில் மிக நீளமாகக் காணப்படுகின்றன. அவற்றின் உடலைச் சுற்றி பல உணர்கொம்புகள் உள்ளன. இதனால் அதன் தொடுகையிலிருந்து தப்பிக்கொள்ள முடியாதுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவை காரணமாக கடலில் குளிப்பவர்களும் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.


No comments

Powered by Blogger.